________________
330]
वीर ज्ञानोदय ग्रन्थमाला
மாதாஜியின் பேருரையால் பலருக்கு நன்மை.
விளக்கு தன்னையும் பிறபொருட்களையும் பிரகாசிப்பது போலவும் சந்தனமரம் நஞ்சுள்ள் பாம்பின் தொடர்ப்பு கொண்டபோதும் அதிக மணம் தருவது போலவும் வந்நனைக்குறிய மாதாஜீ அவர்கள் பிறருக்கு உதவி செய்வதே தன்னுடைய வாழ்க்கையின் குறிக்கோலாகக் கருதி வந்தார்.
பலகுமரிப் பெண்களையும் மாதர்களையும் விதவைகளையும் சம்சாரமென்னும் சகதியிலிருந்து முக்திப் பாதையில் திருப்பினார். இளைஞர்களையும் முதியோர்களையும் ஞானமார்கத்தில் ஈர்ந்து தியாகமென்னும் உச்சிக்கு கொண்டு போனார். இதற்கு எடுத்துக்காட்டாக ஆசார்ய சாந்திசாகரின் நான்காவது பட்டசீடராகிய ஆசார்ய அஜிதசாகரர் அவர்கள் ஒருவரே சான்றாகும்.
பாலபிரம்மசாரி திரு ராஜமல்ஜீ அவர்களுக்கு கி.பி. 1958-59ல் ஆகம நூலாகிய ராஜவார்திகம் கோமட சாரம் கர்மகாண்டம் பஞ்சாத்யாயி முதலிய நூல்களை கற்பித்து துறவு ஏற்கும் வண்ணம் அவருடைய மணதை மாற்றி முனிதிக்ஷைக்கு ஏற்ற மனப்பக்குவமடையச் செய்து கி.பி. 1961ல் ராஜஸ்தானில் உள்ள சீகர் என்னுமிடத்தில் ஆசார்ய சிவசாகர் முனிவரிடம் தீக்ஷைப்பெற்று அஜிதசாகர் முனிவராவதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர் பூஜ்ய ஞாமைதி மாதாஜீ அவர்களை அவர்.
தியாகத்தின் சிறப்பினாலும் பெண் உள்ளத்தில் ஏறப்பட்ட உதார குணத்தாலும் ஆர்யிகை ஞானமதி மாதாஜீ அவர்கள் தன்னிடம் பயின்று முணி தீக்ஷைய் பெற்ற ஆசார்ய அஜித சாகர முனிபுங்கவருக்கு அவர் தீக்ஷைப்பெற்ற உடனே நமோஸ்து செய்தார்.
பூஜ்ய மாதாஜியின் சீடர்களாகிய ஸ்ரீ ஜினமதி மாதாஜீ ஆதிமதி மாதாஜீ அவர்கள் இவரிடம் கல்வி பயின்று 'பிரமேய கமலமார்தண்டம் கோமடசாரம்' முதலிய மிக மிக கடினமான நூல்களை இந்தியில் மொழிபெயர்க்கும் ஆற்றலைப் பெற்றுள்ளனர். இவருடைய சீடராகிய பல ஆர்யிகைகளும் பிரம்மசாரிணிகளும் தங்கள் தங்கள் தகுதிக்கு ஏற்றவாறு ஆங்காங்கு அறப்பிரசாரம் செய்து வருகின்றனர். இலக்கிய உலகில் ஈடற்ற சேவை.
உருதி உள்ளம் கொண்ட உத்தமருக்கு உயர்வு அவசியம் உண்டு என்பதற்கு ஏற்ற 'பூய ஞானமதி மாதாஜி அவர்கள் சீடர்களை தயார் செய்வதில் ஏற்ற மிக்க வெற்றி கண்டவர் மட்டுமல்லாமல் இலக்கிய உலகிலும் கூட ஈடற்ற சேவை செய்துள்ளார். இவர் இதுவரை சுமார் 150 புத்தகங்களை இயற்றியுள்ளார், நூற்றுக் கணக்காண சமஸ்கிருத கவிதைகளையும் படைத்துள்ளார். அஷ்ட சகஸ்ரீ போன்ற கஷ்டமான நூலுக்கு இந்தி உரையும் ஆன்மீக நூலாகிய 'நியமசாரம்' என்னும் நூலுக்கு சமஸ்கிருத மொழியில் உரை எழுதியுள்ளார். பாலர்களுக்கு ஏற்ற 'பாலவிகாஸ' என்னும் புத்தகம் கதை வடிவில் வடித்து சமுதாயத்திற்குத் தந்துள்ளார். பக்தியின் மார்க பிரபாவனையாக இந்திர த்வஜவிதானம் கல்பதரும விதானம் போன்ற பூஜைபுத்தகங்களையும் தயார் செய்து பக்தி உலகத்து பக்தர்களின் மனதை மலரச் செய்துள்ளார்,
புகழுக்கும் இசுழுக்கும் இசையாத இவர் ஆன்ம நன்மைக்காகவும் மக்கிளின் மேன்பாட்டற்காகவும் அல்லும் பகலும் அயராது உழைத்து இரத்னதிரயமென்னும் மும்மணியின் சாதனையில் முழுமூச்சியுடன் ஈடுபட்டு முக்தி உலகையடைய முயலும் அம்மையார் வாழ்க வாழ்க.
அபலைகள் அழகு மலர்கள் மோகத்தின் வலைகள். ஆன்ம நெறியும் தியாக உணர்வும் அவர்களுக்கில்லை என் தரணி மக்கள் கூறும் தவரான வார்த்தையை தள்ளி எரிந்தது ஞானமதியின் தளராத பணிகள்,
Jain Educationa international
For Personal and Private Use Only
www.jainelibrary.org