________________
Sld)
वीर ज्ञानोदय ग्रन्थमाला
கட்டமாக 84 அடி உயரமுள்ள சுமேருமலையின் அமைப்பு கி.பி. 1979ல் உருவாகியது. அதில் அமைந்த 16 ஜினாயங்களின் பஞ்ச கல்யாணப் பெருவிழா அதே ஆண்டு ஏப்ரல் திங்கள் 29 முதல் மே திங்கள் 3 முடிய நடைபெற்றது.
இந்த அமைப்பு பாரத தேசம் மட்டுமல்லாமல் இந்த மண்ணுலகிற்கே அற்புதச் சின்னமாக காட்சி அளிக்கிறது. இதைக் காண வருவபவர்களில் ஜைனர்கள் மட்டுமல்ல ஜைனரல்லாதாரும் கூட இது குதுப் மீனார் போன்றுள்ளது என கற்பனை செய்துகொண்டு இதன் மீது ஏறி வலம் வந்து பகிதிவசப்பட்டு தேவ தரிசனம் செய்து பெருமைப் படுகின்றனர்.
பூஜ்ய ஞானமதி மாதாஜீயின் தவ வலிமையாலும் ஞானத்தின் மகிமையாலும் ஆசீர்வாதத்தின் பலத்தாலும் இந்த ஜம்பூத்வீப அமைப்பின் நிர்மாணப்பணி தொடர்ந்து ஆறு ஆண்டுகாலம் இடைவிடாது நடைபெற்று முடிவுபெற்றது. ஜம்பூத்வீப ஞானஜோதி ரதம் சுற்றுலா
(Jamboodvip Gyanjyoti Pravartan) ஜம்பூத்வீபத்தின் அமைப்பைப்பற்றி பாரத தேச முழுதும் உள்ள மக்கள் அறியவேண்டும் தென் பெருமையை உணரவேண்டும் என்கிற பேரெண்ணம் கொண்ட பூஜ்ய ஞான மதி மாதாஜீ அவர்கள் ஜம்பூத்வீப அமைப்பை ஒரு பெரிய ஊர்தியில் அமைத்து சுற்றுலா வர ஏற்பாடு செய்தார்.
அப்பொழுது பாரத தேச பிரதமராக இருந்த திருமதி இந்திரா காந்தி அம்மையார் அவர்கள் பூஜ்ய மாதாஜியின் ஆசீர்வாதம் பெற்று கி.பி. 1982 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 2ஆம் நாள் டில்லியுலுள்ள செங்கோட்டை மைதானத்தில் சுற்றுலா ஊர்தியை துவக்கி வைத்தார்கள். இந்த சுற்றுலா ஊர்தி சுமார் 1045 நாட்கள் வரை பாரததேச முழுதும் பவணிவந்து பகவான் மகாவீரரின் அறபோதனைகளையும் பொன்மொழிகளையும் நல்லறத்தையும் பரப்பி மக்களிடத்தில் அறவுணர்வு ஊட்டி ஜம்பூத்வீபத்தின் சிறப்பினை உணர்த்தி கி.பி. 1985 ஆண்டு ஏப்ரல் திங்கள் 28 ஆம் நாள் ஹஸ்தினாபுரம் திருத்தலம் வந்தடைந்தது. சுற்றலாவும் முடிவு பெற்றது. அவ்வமயம் பாரததேச பாதுகாப்பு அமைச்சராக இருந்த P.V. நரசிம்மராவ் அவர்களும் நாடாளுமன்ற உருப்பினர் J.K. ஜைன் அவர்களும் ஞானஜோதி என்கிற நந்தாவிளக்கை ஏற்றிவைத்து திரிலோக சோத சம்ஸ்தான் பணிகளைப் பற்றியும் பூ. மாதாஜீ அவர்களையும் பாராட்டி மகிழ்ந்தனர். அந்த ஞானஜோதி இப்பொழுதும் கூட அல்லும் பகலும் ஞான ஒளியை அள்ளி வீசிக் கொண்டே இருக்கிறது.
ஜம்பீத்வீப அமைப்பின் நிர்மாணப்பணி முட்வுபெற்று அதில் நிருவிய அனைத்து தேவபவனம் ஜினபிம்பம் ஆகியவைகளின் பஞ்ச கல்யாண பிரதிஷ்டைப் பெருவிழா கி.பி. 1985 ஏப்ரல் 28 முதல் மே திங்கள் 2ம் நாள் முடிவு மிகச் சிறப்பாக நடந்தேறியது.
இப்பொழுது ஹஸ்தினாபுரம் பகவான் சாந்தி நாதர் காலத்தில் இருந்த ராஜதானியின் உருவத்தை மேற்கொண்டுள்ளது. அக்காலத்து பெருமையின் வர்ணனை புராணங்கலில் மட்டும் இருந்து வந்தது ஆனால் தற்போதுள்ள இதன் வளர்ச்சியையும் பூஜ்ய மாதாஜீ அவர்கள் ஆசீர்வாதத்தால் நிகழ்ந்துள்ள சிறப்பு மிக்க நற்பணிகளையும் மக்கள் கண்டு பாராட்டுகின்றனர். மாதாஜீ அவர்களின் திருவடிபட்ட இந்த இடத்தின் மண்துகல்கள் ஒவ்வொன்றும் தூய்மைபெற்று கடந்தகால வரலாற்றை நிகழ்கால வரலாற்றுடன் பிணைத்து இனிய புனித நாதம் எழுப்புகின்றன என்றால் மிகையாகாது. பூஜ்ய மாதாஜியின் வாழ்க்கையில் நிகழ்ந்த அற்புதச் சம்பவங்கள்.
வந்தனைக்குறிய ஆர்யிகாரத்ன ஞானமதி மாதாஜீ அவர்கள் பாரத தேசம் முழுதும் அறப்பயணம் செய்து அறம் பரப்பி அற்புதமான பணிகளைச் செய்துள்ளார் என்பதை இதுவரை படித்தீர்கள். இவரை நாடி வந்தவரும் கூட தங்கள் வாழ்நாளில் லௌகிக. ஆன்மீக துறையிலும் கூட பேருதவி பெற்றனர் என்பதைப் பற்றிய சில சம்பவங்களைக் காணலாம். காணாமற்போன இளைஞன் மீண்டும் வீடு திரும்பிய அதிசயம்.
கி.பி. 1983ல் நடந்த சம்வம் இது. அவதநாட்டிள் சீதாபூர் மாவட்டத் திற்குட்பட்ட 'பேல்ஹரா' என்னும் கிராமத்தைச் சார்ந்த வீரகுமார் என்னும் ஸ்ராவகர் ஒருவர் ஹஸ்தினாபுரம் வந்தார். பூ. மாதாஜியை தரிசித்து கூறினார். மாதாஜி! பதினெட்டு வயது நிரம்பிய என்னுடைய மகன் எங்கோ போய்விட்டான், எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மனதிற்கும் நிம்மதி இல்லை என்று கூறி கலங்கி அழ ஆரம்பித்தான்.
பூ. மாதாஜீ அவர்கள் அவருக்கு தைரியமுட்டி கூறினார். மனம் கலங்கவேண்டாம், நான் ஒரு மந்திரம் தருகிறேன். அதை ஒன்னேகால் இலக்ஷம் முறை ஜபிப்பாயாக. உங்கள் மகன் தன்னம் தானே வீடு வந்து சேர்ந்துவிடுவான் என்றார்.
வீரகுமார் அவர்களும் மாதாஜியின் வார்த்தையில் நம்பிக்கைவைத்து வீடுவந்து ஜபம் செய்ய ஆரம்பித்தார். ஆனால் மகன் பிரிவினால் மனநிம்மதி ஏது சிறிது நேரம் ஜபம் செய்வார். சோர்வு அடைந்து தன்னுடைய மகனைப் பற்றியே சிந்திப்பார். மகன் வருவானோ வரமாட்டானோ அவன் என்ன தொல்லையில் உள்ளானோ பாவம் என்றெல்லாம் சிந்திக்கலானார். இது போன்று ஒருமாதம் கழிந்தது. காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தார்.
Jain Educationa international
For Personal and Private Use Only
www.jainelibrary.org|