________________
ஒரு சிறுவன் கல்லை வீசி, அது ஏற்படுத்திய காயத்தால் ரத்தம் பெருகுகிறது என்றால் என்ன செய்வீர்கள்? கோபப்படுவீர்கள் இல்லையா? நீங்கள் பயணித்துக் கொண்டிருக்கும் பாதையில் மலை மீதிருந்து ஒரு கல் விழுந்து, அது உங்களுக்கு காயமேற்படுத்தினால் என்ன செய்வீர்கள்? கோபப்படுவீர்களா? இல்லையே, காரணம் என்ன? இங்கே மலையிலிருந்து கல் விழுந்தது, அங்கேயோ கல்லை சிறுவன் வீசினான், ஆனால் மலையிலிருந்து கல் உருண்டு விழுந்தது,யார் அந்தக் கல்லை உருட்டினார்கள்?
புரிந்து கொள்ள வேண்டிய அறிவியல் வினா : எனக்கு மோதலில் ஈடுபட வேண்டும் என்று இல்லை ஆனால் எதிரில் உள்ளவர் வந்து என்னுடன் மோதலில் ஈடுபடும் போது நான் என்ன செய்வது?
தாதாஸ்ரீ : இந்தச் சுவற்றோடு ஒருவர் மோதிக் கொண்டிருந்தால், எத்தனை நேரம் வரை அப்படி மோதிக் கொண்டிருப்பார்? சுவர் மீது மோதுவதால் காயம் ஏற்பட்டால், அப்போது சுவற்றை என்ன செய்வீர்கள்? தலையை வைத்து, சுவர் மீது மோதலில் ஈடுபட்டீர்கள், இப்போது சுவற்றுக்குத் தண்டனை அளிப்பீர்களா? இதை போல் உங்களோடு மோதலில் ஈடுபடும் நபரை, சுவராக கருதிக் கொள்ளுங்கள். அவர்கள் அனைவரையும் சுவர்களாக நீங்கள் கருதினால், எந்த கஷ்டமும் இருக்காது. அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தீர்வு ஏற்படும்.
சுவற்றை திட்டுவதற்கு சக்தி உங்களிடம் இருக்கிறதா? அதே போல்தான் மற்ற மனிதர்களுடன் வீணாக கூப்பாடு போடுவதில் என்ன பயன்? அவர்களின் கையில் எந்த அதிகாரமும் இல்லை, ஆதலால் நீங்கள் சுவர் போல ஆகிவிடுங்கள். நீங்கள் உங்கள் மனைவியைத் திட்டிக் கொண்டே இருக்கிறீர்கள், ஆனால் அவருக்குள்ளேயும் பகவான் இருக்கிறார், அவர் நீங்கள் அவரை திட்டுவதாக அல்லவா கருதுவார்? அவர் உங்களைத் திட்டினார் என்றால், நீங்கள் சுவர்போல ஆகிவிட்டால், உங்களுக்குள்ளே இருக்கும் பகவான் உங்களுக்கு உதவியாக இருப்பார்.
ஒருவரிடத்தில் கருத்து வேறுபாடு கொள்வதும், சுவர் மீது மோதுவதும் இணையானவையே. இவை இரண்டுக்கும் இடையே எந்த வேறுபாடும் கிடையாது. சுவர் மீது யார் மோதினாலும், எதிரில் இருப்பது என்னவென்று தெரியாத காரணத்தாலேயே மோதுகிறார். இப்படித்தான் எல்லோரும் சுவரை போல் தான் இருக்கிறார்கள். எதிரில் இருக்கும் தீர்வு அவருக்குப் புலப்படுவதில்லை , ஆகையால் வேறுபாடு ஏற்படுகிறது. தவறு மோதுபவர் மீது தானே, தவிர சுவர் மீது இல்லை , சரிதானே!! இந்த உலகிலும் பல சுவர்கள் இருக்கின்றன. சுவர் மீது மோத நேர்ந்தால், அதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு கோதாவில் மோத நீங்கள் இறங்கப் போவதில்லையே!!! கோபம், ஆணவம், வஞ்சம்,
41