________________
சகித்துக் கொள்ளாதீர்கள், தீர்வு காணுங்கள் மோதலைத் தவிர்ப்பது என்றால் அதை சகித்துக் கொள்ளுதல் அல்ல. எத்தனை காலம் தான் பொறுத்துக் கொள்வீர்கள்? சகித்துக் கொள்வதும், ஒரு "ஸ்ப்ரிங்கை” அழுத்திக் கொண்டிருப்பதும் ஒன்று தான். ஒரு "ஸ்ப்ரிங்கை” எத்தனை நேரம் தான் அழுத்தியே வைத்திருக்க முடியும்? ஆகையால் சகித்துக் கொள்வது என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டியதே இல்லை. தீர்வு காண கற்று கொள்ளுங்கள். அஞ்ஞான நிலையில், சகிப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஏதோ ஒரு காலகட்டத்தில் "ஸ்ப்ரிங்” விடுபடும் போது, அதிக சேதத்தை ஏற்படுத்தும்.
மற்றவர்களின் செயல்பாடுகளை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறதென்றால், அது உங்கள் கடந்தகாலக் கர்மங்களின் விளைவுகளே. ஆனால் இந்தக் கணக்கு பற்றி உங்களுக்குத் தெரியாது, இது ஏதோ புதிதாக உங்களைக் குறிவைத்து தொடுக்கப்படுகிறதாக நீங்கள் நினைத்துக் கொள்கிறீர்கள். புதிய கணக்குகளை யாரும் தொடங்குவதில்லை. நாம் கொடுத்ததை தான் திரும்ப பெறுகிறோம்.பழைய மிச்சங்கள் தான் உங்களை பாதிக்கின்றன. உங்கள் கடந்த பிறவியின் கர்ம கணக்கின் விளைவாகவே உங்களை இவை அண்டுகின்றன, எதிராளி கருவி மாத்திரமே.
மோதல் உங்களின் தவறே இந்த உலகில் ஏற்படும் மோதல்கள் அனைத்தும் உங்களின் தவறு தான் காரணமே தவிர, எதிரில் இருப்பவரின் தவறேதுமில்லை . மனிதர்கள் எப்படியும் மோதலில் ஈடுபடவே செய்வார்கள். "ஏன் மோதலில் ஈடுபட்டீர்கள்? என்று கேட்டால், "அவர்கள் தான் ஈடுபட்டார்கள்” என்ற பதில் வரும். அவர் தான் கண்ணிழந்தார் என்றால், மோதலில் ஈடுபட்டு நீங்களும் பார்வைத்திறன் இழந்துவிட்டீர்கள்.
மோதல் ஏற்பட்டால், அதற்கு நீங்கள் தான் காரணம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். தவறு உங்களுடையது தான் என்பதை நீங்கள் விளங்கிக் கொண்டால், உங்களுக்குத் தீர்வு கிடைக்கும், புதிர் அவிழும்."எதிராளியின் தவறு” என்று தேடித் திரிந்தோமென்றால், புதிருக்கான விடை கிடைக்காமலேயே போய் விடும். "தவறு என்னுடையது தான்” என்று நீங்கள் ஏற்கும் போது, உலகம் நம்மை பாதிக்காது. இதை விட்டால் வேறு தீர்வு ஏதும் கிடையாது. யாருடனாவது மோதல் ஏற்பட்டது என்றால், அது நமது அஞ்ஞானத்தின் அறிகுறி.
40