________________
பொறாமை, பேராசை எல்லாம் புலப்படாததாலேயே உண்டாகின்றன. இந்த உலகில் அனைத்துமே சுவர்கள் தான். சுவர் மீது மோதினால் யார் தவறு, யார் சரி என்று நிரூபிக்க செல்கிறீர்களா? அதுபோல் கருத்து வேறுபாடு ஏற்படுதவற்கு காரணமும் தீர்வு என்ன என்று புலப்படாமல் போவதுதான்.
மோதல்கள் ஆத்மசக்தியைக் குறைக்கின்றன
உங்கள் ஆத்மசக்திகள் முழுவதையும் ஒன்று குறைக்கிறது என்று சொன்னால், அது மோதல்கள் தாம். சற்று மோதினாலும், அவ்வளவு தான். அடுத்தவர் நம்மோடு மோதினால் நாம் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். கட்டுப்பாட்டை இழந்து மோதலில் ஈடுபடக் கூடாது. மோதல் மட்டும் இல்லாது போனால், மனிதன் மோக்ஷம் அடைவான். ஒருவர் "நான் மோதலில் ஈடுபட மாட்டேன்” என்பதை மட்டும் கற்றுக் கொண்டு செயல்படுத்தினாரேயானால், அவருக்குஎந்த குருவின் தேவையும் இருப்பதில்லை. ஒன்றிரண்டு பிறவிகளில் அவர் நேரே மோக்ஷம் அடைந்து விடுவார். அடுத்தோரிடத்தில் எக்காரணம் கொண்டும் "மோதலில் ஈடுபட மாட்டேன்” என்ற உறுதிப்பாட்டை ஒருவர் மேற்கொண்டு கடைப்பிடிக்கத் தொடங்கினால், அது தான் சரியான நம்பிக்கையான "சமகித்” (மெய்யான நோக்கம்) என்பதன் தொடக்கம்.
கடந்த பிறவியில் மோதல்கள் காரணமாக இழந்த அனைத்து சக்திகளும் இப்போது உங்களிடம் மீண்டும் வந்து குடிகொள்ளும். ஆனால் இப்போது புதிய மோதல்களில் நீங்கள் ஈடுபட்டால், அவையனைத்தும் உங்களை விட்டுச் சென்று விடும். நீங்கள் மோதல்களைத் தவிர்த்தால், சக்திகள் விடாமல் அதிகரித்து கொண்டே இருக்கும்.
உலகில் மோதல் ஏற்படக் காரணமாக இருப்பது வஞ்சம் என்ற பழிவாங்கும் உணர்வு. இது தான் உலகின் மூலக்காரணமாக இருக்கிறது. யார் தனது பழிவாங்கும் உணர்வையும், மோதல் உணர்வையும் முற்றிலும் நிறுத்திவிட்டார்களோ, அவர் மோக்ஷம் அடைந்து விடுவர். அன்பிற்கு உண்டோ அடைக்கும் தாழ்; வஞ்சமும், பகையும் மனதிலிருந்து விடை பெற்றால், அன்பு பிறக்கும். அன்பு தடையாக இல்லை, பழிவாங்கும் எண்ணம் விடைபெற்றால் அன்பு உருவாகும்.
இயல்பறிவு எல்லாவிடங்களிலும் பொருந்தும்
ஒருவர் உங்களோடு மோத முயல்கிறார், ஆனால் நீங்கள் அவருடன் மோதலில் ஈடுபடவில்லை எனும் போது, "இயல்பறிவு” உண்டாகிறது. மாறாக நீங்கள் அவருடன் மோதினீர்கள் என்று சொன்னால், உங்கள் இயல்பறிவு உங்களிடமிருந்து விடைபெற்றுச் செல்லும். உங்கள் தரப்பிலிருந்து நீங்கள் மோதக் கூடாது. மற்றவர்கள் உங்களிடம் மோதினால் உங்களின் இயல்பறிவு அதிகரிக்கிறது. மோதல் சமயங்களில் நீங்கள் எப்படி 42