________________
அக்ரம் விஞ்ஞானம் ஆத்ம அனுபவம் பெற எளிய, சிறப்பான விஞ்ஞானம்
1. மனித வாழ்க்கையின் இலக்கு என்ன?
ஓட்டுமொத்த வாழ்க்கையுமே தடம் புரண்டு போய் விட்டது. நாம் ஏன் வாழ்கிறோம் என்பது பற்றிய விழிப்புணர்வே இல்லை. இலக்கு இல்லாத ஒரு வாழ்க்கைக்கு, ஒரு பொருளே இல்லை. செல்வம் வருகிறது, கேளிக்கைகளில் ஈடுபடுகிறோம், நாள்முழுக்க எதையாவது பற்றிய கவலைகளில் தோய்ந்து விடுகிறோம். இதையெல்லாம் இலக்கு என்று நாம் எப்படி நினைப்பது? மனித வாழ்க்கையை நாம் இப்படி ஏன் விரயமாக்குகிறோம்? அப்படியென்றால் மனிதப் பிறப்பை அடைந்தவுடன், நாம் நம் இலக்கை நோக்கி முன்னேறிச் செல்ல என்ன செய்ய வேண்டும்? உலக இன்பங்களை நாம் விரும்பினால், நீங்கள் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தை மக்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உலக விதியை ஒரே வாக்கியத்தின் மூலம் புரிந்து கொள்ளுங்கள், உலகின் அனைத்து சமயங்களின் சாரம் இது தான் - 'மனிதன் சுகத்தை நாடுகிறான் என்றால், அனைத்து உயிருக்கும் சுகம் அளிக்க வேண்டும், துக்கத்தை விரும்புகிறான் என்றால், துக்கத்தை அளிக்கவேண்டும். எது சாதகமோ அதை அளியுங்கள். எங்களிடம் செல்வம் இல்லையே, நாங்கள் எவ்வாறு சுகத்தை அளிப்பது என்று ஒருவர் கேட்டால்? வெறும் செல்வத்தை அளிப்பதன் மூலம் மட்டுமே சுகம் அளிக்க இயலும் என்று இல்லை, அவர் தன்னிடத்தில் உதவும் பண்பை வளர்த்துக் கொள்ளலாம், துயரத்தில் இருப்போருக்கு ஏதேனும் தேவைப்பட்டால் அதைக் கொண்டு தரலாம், ஆலோசனைகள் அளிக்க வேண்டி வந்தால், அதை அளிக்கலாம்; இப்படி பல வழிகளில் உதவிகரமாக இருக்கலாம்.