________________
தாதா பகவான் யார்?
ஜூன் மாதம் 1958 ஆம் ஆண்டின் ஒரு மாலைப் பொழுது சுமார் 6 மணி வேளை, கூட்டநெரிசல் நிறைந்த சூரத் இரயில் நிலையம், நடைமேடை எண். 3 இல் உள்ள இருக்கை ஒன்றின் மீது திரு. அம்பாலால் மூல்ஜீபாய் படேல் அமர்ந்திருந்தார். குடும்பஸ்தரான இவர் ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வந்தார். அவர் அங்கே அமர்ந்திருந்த போது அடுத்த 48 நிமிடங்களில் ஒரு அதிசயம் நிகழ்ந்தது. தன்னிச்சையான ஆத்ம அனுபவம் அம்பாலால் எம். படேல் அவர்களுக்குள்ளே மலர்ந்தது. இந்த நிகழ்வின் போது, நான் யார்? பகவான் யார்? உலகை யார் இயக்குகிறார்கள்? கர்மா என்பது என்ன? முக்தி யாது? உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மீக வினாக்களின் முழுமையான இரகசியங்களும் தெள்ளத்தெளிவாகப் புலப்பட்டன. இந்த வகையில் இயற்கை முன்பாக ஒரு ஒப்பில்லா பூரண காட்சியை கொண்டு சேர்த்தது இதுவே குஜராத்தின் சரோத்தர் பகுதியின் பாதரண் கிராமத்தைச் சேர்ந்த பங்குதாரரும், ஒப்பந்ததாரருமான திரு. அம்பாலால் மூல்ஜீபாய் படேலை, முழுமையாக ஆசைகளை அகற்றிய மஹானாக மாற்றியது.
வியாபாரத்தில் தர்மம் இருக்க வேண்டும், தர்மததை வியாபாரமாக்க கூடாது', இந்த சித்தாந்தத்தை பின்பற்றியே தனது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் வாழ்ந்தார் இவர். வாழ்க்கையில் எப்போதுமே இவர் யாரிடமிருந்தும் பணம் பெற்றதில்லை. மாறாக, தனது வருமானத்தை பக்தர்களின் யாத்திரைக்கு செலவு செய்தார்.
எப்படி இவருக்கு ஆத்ம அனுபவம் வாய்க்கப் பெற்றதோ, அதே போல, இரண்டே மணி நேரத்தில் மற்ற ஆத்ம அனுபவம் நாடுபவர்களுக்கும், தனது அதிசயமான சித்திகள் கொண்ட ஞானபிரயோகத்தால் ஆத்மஞானம் கிடைக்கச் செய்கிறார். ஆத்மஞானம் உதிக்கச் செய்தார். ஞானபிரயோகம் வாயிலாக அவருக்கு அதிசயமான சித்திகள் கிடைத்தன. அதை அக்ரம் மார்க்கம் என்றழைத்தார். க்ரமம் என்றால் படிப்படியாக, க்ரமப்படி மேல்நோக்கிய பயணம். அக்ரம் அதாவது லிஃப்ட் மார்க்கம், படிகள் ஏறாமல் சுலபமான வழி.
அவர் தானே, 'தாதா பகவான் யார்?' என்ற ரகசியத்தைப் பற்றிக் கூறுகையில், "உங்கள் கண்களுக்குத் தெரிபவர் தாதா பகவான் அல்ல, அவர் ஏம்.எம்.படேல் தான். நான் ஞானி, என் உள்ளே வெளிப்பட்டு இருப்பவர், அவர் தான் தாதா பகவான். தாதா பகவான் 14 லோகங்களின் நாதன். அவர் உங்களுக்குள்ளேயும் இருக்கிறார், அனைவருக்கு உள்ளேயும் இருக்கிறார். மேலும் என்னுள்ளே பூரணமான வடிவில் வெளிப்பட்டிருக்கிறார். தாதா பகவானுக்கு நானும் நமஸ்காரம் செய்கிறேன்.உங்களுள்ளில் வெளிப்படாத நிலையில் இருந்து கொண்டு இருக்கிறார்.