________________
இருவகை இலக்குகள், உலக ஆதாயம், ஆத்ம ஆதாயம் நாம் இருவகை இலக்குகளைத் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். என்னவென்றால், ஒன்று, நாம் உலகில் இப்படி தான் இருக்க வேண்டும். யாருக்கும் கஷ்டம் ஏற்படாமல், யாரையும் துக்கத்துக்குள்ளாக்காமல் வாழ வேண்டும். இந்த வகையில் நாம் நல்ல மகான்களுடன், நல்ல மனிதர்களோடு வாழவேண்டும். கெட்ட பழக்கம் உள்ளவர்களின் தொடர்பு (குசங்கம்), நமக்கு ஏற்படக் கூடாது என்ற சில இலட்சியங்கள் இருக்க வேண்டும். இது முதல்ரக இலக்கு. மற்றோரு இலட்சியத்தின்படி, பிரத்யக்ஷமான ஒரு ஞானி கிடைத்து, அவரிடமிருந்து ஆத்மஞானம் வாயக்கப் பெற்று, அவர்களின் சத்சங்கத்தில் இருந்து கொண்டு அதன் மூலம் உங்களின் ஒவ்வொரு செயலும் சாத்தியமாகும். அனைத்துப் புதிர்களுக்கும் தீர்வு கிடைத்து, மோக்ஷம் சித்தக்கும்.
ஆக, மனிதனின் நிறைவான இலட்சியம் என்ன? மோக்ஷம் செல்வதே இலக்காக இருக்க வேண்டும்.உங்களுக்கும் மோக்ஷம் செல்ல வேண்டும் தானே? எவ்வளவு காலம் தான் நாம் திசையறியாமல் திரிந்து கொண்டிருப்போம்? கணக்கற்ற பிறவிகள் அலைந்து திரிந்த பிறகும் திரிவதில் சலிப்பு ஏற்படவில்லையா?எதனால் திரிந்து அலைய வேண்டி வந்தது? ஏனென்றால், 'நான் யார்?'என்ற வினாவிற்கான விடை நமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் நமது மெய்யான இயல்பு பற்றி அறிந்திருக்கவில்லை. நாம் நமது மெய்யான இயல்பு பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். 'நான் யார்' என்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா? இத்தனை திரிந்தலைந்த பிறகும் இதை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா? வெறும் செல்வம் ஈட்டுவதிலேயேவா உங்கள் காலத்தைக் கழித்தீர்கள்? மோக்ஷத்திற்க்கு சற்றாவது செயல்புரிய வேண்டுமா, வேண்டாமா? மனிதன் உண்மையில் பரமாத்மாவாக மாற முடியும். நாம் பரமாத்மா நிலையை அடைவது தான் நிறைவான இலக்கு, இலட்சியம்.
மோக்ஷம், இரு நிலைகளில் வினா : பிறப்பிறப்பிலிருந்து விடுபடுதல் தான் நாம் பொதுவாக மோக்ஷம் என்று புரிந்து கொள்கிறோம்.
தாதாஸ்ரீ : ஆம், இது சரி தான், ஆனால் அது இறுதி முக்தி,இரண்டாவது நிலை. முதல் நிலை மோக்ஷம் என்பது வாழ்க்கையில் துக்கங்கள் இல்லாமல் இருப்பது தான். வாழ்க்கையின் துக்கங்களில் துக்கம் தொடாமல், உபத்திரவத்திலும் சமாதி நிலையில் இருப்பது தான் முதல் நிலை மோக்ஷம். இரண்டாம் நிலை மோக்ஷம் என்பது அனைத்து கர்மங்களும் முழுமையாக முடித்து விட்டு, பிறப்பு இறப்பிலிருந்து முக்தி அடைந்தால் தான் நிறைவான மோக்ஷம் ஏற்படும்; முதல் மோக்ஷம் இவ்வுலகில் இங்கே தான் அனுபவிக்க