________________
எப்படி அனுசரித்து நடக்க வேண்டும் என்றால், "இத்தனை அழகான தொப்பியை எங்கிருந்து வாங்கி வந்தாய்?, என்ன விலை? மிகவும் மலிவாக கிடைத்ததா?” என்று வினவ வேண்டும்.
சிரமங்களில் சுகத்தைக் காண வேண்டும் என்று தான் நமது சமயம் நமக்கு எடுத்துரைக்கிறது. "இந்தப் போர்வை அழுக்காக இருக்கிறது” என்று இரவில் எனக்கு ஒரு எண்ணம் ஏற்பட்டது. உடனே நான் அனுசரித்து நடக்கத் தீர்மானித்தேன்; அதன்பின் அந்தப் போர்வை எனக்கு நன்றாகவும் மென்மையாகவும் இருக்கத் தொடங்கியது. ஐம்புலன்கள் அளிக்கும் அறிவு சிரமங்களையே நம் கண்முன்னே நிறுத்துகிறது; மாறாக ஆத்மஞானமோ சுகங்களைக் காட்டுகிறது. ஆகையால் ஆத்மாவிலேயே நிலைத்திருங்கள்.
நல்லவை-கெட்டவை பற்றிய நமது கருத்துக்கள் தான் நம்மை வாட்டுகின்றன. நாம் இரண்டையுமே சமநோக்கிலேயே காண வேண்டும். ஒன்றை நாம் நல்லது என்று கூறும் வேளையில், மற்றவை தீயவையாக நாம் பார்க்கிறோம், இது நம்மை வாட்டுகிறது. உண்மை பேசுபவரிடத்திலும், பொய்யுரைப்பவரிடத்திலும் நாம் அனுசரித்து நடக்க வேண்டும். "உங்களுக்கு மூளையே இல்லை” என்று கூறுபவரிடம், "அது முதல் இருந்தே இல்லைங்க, நான் கொஞ்சம் மந்தம் தான், இன்னைக்குத் தான் இந்த விஷயம் உங்களுக்கு தெரிய வந்திருக்கு, எனக்கு சின்ன வயதிலேர்ந்தே தெரியும்” என்று கூறுங்கள். இப்படி உங்கள் எதிர்வினை இருந்தால், சச்சரவு ஏற்படாது. அவர்கள் மீண்டும் உங்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்.
மனைவியிடத்தில் அனுசரித்தல் ஏதோ காரணமாக நாம் வீடு திரும்ப காலதாமதமாகி விட்டால், மனைவி "இத்தனை நேரமா எங்க போயிருந்தீங்க? என்னால இதுக்கு மேல பொறுத்துக்க முடியாது” என்று கோபித்துக் கொண்டால், "ஆமா, நீ சொல்றது சரிதான், நீ சொன்னா நான் திரும்பி போயிடறேன், இல்லை நீ சொன்னா நான் உள்ளே வர்றேன்” என்று கூறிப் பாருங்கள். அப்போது அவர், "இல்லை, திரும்பி போகாதீங்க, இங்கேயே இருங்க” என்பார். நீங்கள் மீண்டும், "நீ சாப்பிடுன்னு சொன்னா வீட்டுல சாப்பிடறேன், இல்லைன்னா சாப்பிடாமயே படுத்துக்கறேன்” என்றால், அவர், "இல்லை, இல்லை, வந்து சாப்பிடுங்க” என்பார். இது தான் அனுசரித்தல். காலையில் எழுந்தவுடன், அருமையான தேநீர் அருந்தக் கொடுப்பார். நீங்கள் மட்டும் கடுமையாக நடந்திருந்தீர்கள் என்றால், அவரும் அதே கடுமையை உங்களிடம் காட்டியிருப்பார், காலையில் தேநீர் தருவதிலும் இந்தக் கடுமை நீடித்திருக்கும், இந்த நிலை அடுத்த 3-4 நாட்கள் தொடர்ந்திருக்கும்.
33