________________
மீண்டும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க, உறுதி எடுத்து கொள்ள வேண்டும்). ஞானி ஞானம் கொடுத்த பின்பு நீங்கள் உங்களின் எல்லா தவறுகளையும் பார்க்க இயலும்.
ஜெய் சத் சித் ஆனந்தம்
et
அனைத்திடங்களும் அனுசரித்து நடக்கவும் இந்த வாக்கியத்தை நன்கு உள்வாங்கிக் கொள்ளுங்கள்
அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடக்கவும்” என்ற இந்த வரியை மட்டும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கைக்கொள்ளப் பழகி விட்டீர்கள் என்றால், உங்களால் அதிகம் சாதிக்க முடியும். உங்களுக்குள்ளே இயல்பாகவே அமைதி நிறையத் தொடங்கும். இந்த பயங்கரமான கலியுகத்தில் நீங்கள் அனுசரித்துக் கொள்ளப் பழகவில்லை என்றால், உங்கள் பொன்னான வாழ்வு வீணாகிப் போகும்.
உலக வாழ்வில் வேறு எதுவும் உங்களால் கற்க முடியவில்லை என்றாலும் கூட பாதகமில்லை, ஆனால் அனுசரித்துக் கொள்ளத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் எதிரே இருப்பவரால் அனுசரித்துப் போக இயலவில்லை, ஆனால் நீங்கள் அனுசரித்து நடக்கிறீர்கள் எனும் போது, நீங்கள் அனைத்து கஷ்டங்களையும் கடக்கும் படைத்தவர்களாவீர்கள். மற்றவர்களிடம் அனுசரித்து நடக்க முடிந்தவர்களிடம் துக்கத்தின் சாயல் இருக்காது. "அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடக்கவும்”. ஒவ்வொருவரிடத்திலும் அனுசரித்து நடத்தல் என்பதே மிகப் பெரிய மனித இயல்பு. இந்தக் காலத்தில பலவகையான இயல்பு படைத்தவர்கள் இருக்கிறார்கள், இந்த நிலையில் அனைவரிடமும் அனுசரித்து நடக்காமல் எப்படி இருக்க முடியும்?
என்னை விட்டு விலகி இரு என்று இந்த ஐஸ்க்ரீம் உங்களிடம் கூறவில்லை. அதை உண்ண உங்களுக்கு விருப்பமில்லை என்றால் உண்ணாதீர்கள். ஆனால் இந்த வயதானவர்கள் அதைப் பார்த்தவுடனேயே சிடுசிடுப்பாகி விடுகிறார்கள். இவை எல்லாம் கால மாற்றத்தின் விளைவுகள். இந்த சிறுவயதுக்காரர்கள் காலத்திற்கேற்ப நடக்கிறார்கள்.
நான் என்ன சொல்கிறேன் என்றால், "உலகத்திற்கேற்ப மாறுங்கள்” என்கிறோம். பையன் புதுத் தொப்பி அணிந்தான் என்றால், "என்ன கண்றாவியை போட்டுக்கிட்டு வந்திருக்கே?” என்று கேட்கிறோம், இப்படிக் கூறக் கூடாது. இப்படி கூறுவதற்கு பதிலாக
32