________________
உணவு உண்ணும் வேளையில் அனுசரித்தல் அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடப்பது என்பது தான் ஒழுக்கமுடைய வாழ்க்கைத் தொடர்புகளின் பொருள். இது அனுசரித்து நடத்தல் இருக்க வேண்டிய உலகம். கருத்து வேறுபாடுகளுக்கு இடம் அளிக்காதீர்கள். ஆகையால் தான் நான் "அனைத்து இடங்களிலும் அனுசரித்து நடக்கவும்,” என்ற சூத்திரத்தை அளித்திருக்கிறேன். வடிசாற்றில் அதிக உப்பு இருந்தால், அனுசரித்து நடக்க வேண்டும் என்று தாதாஜி கூறியிருக்கிறாரே என்று நினைவில் கொள்ளுங்கள், சற்று குறைவாக வடிச்சாற்றை குடிக்கவும். ஆம், ஊறுகாய் வேண்டும் என்று தோன்றினால், சற்று ஊறுகாய் கொண்டு தா என்று கேட்டுக் கொள்ளுங்கள். சண்டை கூடாது, வீட்டில் சண்டை ஏற்படக் கூடாது. சிரமமான சூழ்நிலைகளிலும் அனுசரித்து நடக்கப் பழகி விட்டீர்கள் என்றால், வாழ்க்கை சுகமான, சீராண பயணமாக அமையும்.
விருப்பமில்லை என்றாலும், ஏற்புத்தன்மையை வளர்த்துக் கொள்ளுங்கள் உங்களிடத்தில் யாரெல்லாம் அனுசரித்துப் போகவில்லையோ, அவர்களிடம் எல்லாம் நீங்கள் அனுசரித்து செயல்படுங்கள். தினசரி வாழ்வில் மாமியார்- மருமகளுக்கு இடையேயாகட்டும், ஓரகத்திகளுக்கு இடையேயாகட்டும், அனுசரிப்பு காணப்படவில்லை என்றால், யாரொருவர் உலகவலையில் இருந்து விடுபட நினைக்கிறார்களோ, அவர்கள் அனுசரித்துத் தான் போக வேண்டும். கணவன் மனைவிக்கிடையே ஒருவர் கோளாறு ஏற்படுத்திக் கொண்டிருந்தால், மற்றவர் உறவை சீர் செய்வதில் ஈடுபடவேண்டும். அப்போது தான் உறவு நிலைக்கும், அமைதி நிலவும். உலகைச் சார்ந்த விஷயங்களில், உங்கள் கருத்தே சரி என்று சாதிக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து இடங்களிலும் அனுசரித்துச் செல்பவன் தான் மனிதன்.
மேம்படுத்தவா அல்லது அனுசரித்துச் செல்லவா? ஒவ்வொரு விஷயத்திலும் எதிரில் இருப்பவரை அனுசரித்து நடந்தால், வாழ்க்கை எத்தனை இனிமையாக ஆகிவிடும். மரணம் நம்மை வந்து தழுவும் வேளையில், நாம் எதைக் கொண்டு செல்கிறோம்? "மனைவியை திருத்துங்கள்” என்று ஒருவர் கூறினால், நான் உங்களுக்கு என்ன அறிவுரை சொல்கிறேன் என்றால் "அவரை சரிசெய்ய முயலும் வேளையில் நீ தான் கோனித்து போவாய்” என்பேன். ஆகையால் மனைவியை திருந்த செய்யும் செயலில் ஈடுபட வேண்டாம், அவர் எப்படி இருந்தாலும், அது சரிதான் என்று கூறுங்கள். நிரந்தரமாக நீங்கள் அவருடன் தான் இருக்க வேண்டும் என்றால் நிலைமை வேறு; ஆனால் இது ஒரு ஜென்மத்துக்குத் தானே, பிறகு நீங்கள் எங்கே செல்வீர்கள் என்று யார் அறிவார்கள்? இருவரின் மரணக்காலம் வேறுவேறு, இருவரின் கர்மபலன்கள் வேறுவேறு. இங்கே எந்தக் கொடுக்கலோ வாங்கலோ இல்லை. அடுத்தபடியாக அவர் எங்கே
34