________________
வேண்டி கொள்ளுங்கள். அப்படி நடக்கவில்லை என்றால், அதற்கு வருந்துங்கள். ஞானியின் தரிசனத்தை செய்து அவருடைய அருகில் நீங்கள் அமர்ந்திருக்க வேண்டி கொள்ளுங்கள்.
14. தாதாவின் புத்தகங்கள் சஞ்சிகைகளைப் படிப்பதன் முக்கியத்துவம்
ஆப்தவாணி, எப்படி செயல்படுகிறது!
இவை ஞானியின் சொற்கள்,இவை புத்தம்புதிதாய் இருக்கின்றன. இதன் பொருள் தற்காலத்துக்கு ஏற்ப அமைந்திருக்கின்றன, ஆகையால் அவற்றைப் படிக்கும்போதே உங்களின் நிலை மாறுவதை நீங்கள் உணரலாம். ஆனந்தம் உங்களுக்குள்ளே ஊற்றெடுக்கும். இவை ஒரு ஞானியின் சொற்பொழிவு. ஆசாபாசங்கள் ஏதும் இல்லாததால், இவை செயல்படும். பகவானது சொற்பொழிவு விருப்பு வெறுப்பு ஏதும் இல்லாதவையாக இருந்ததால்தான், அவை இன்று வரை ஜீவனோடு இருக்கின்றன. இப்படித்தான் ஞானியின் சொற்பபொழிவு, பலன் அளிக்க கூடியவை.முக்தி அடைவதற்கு, ஞானியின் சொற்பொழிவு ஒன்றேதீர்வானது.
நேரடி சத்சங்கம் அமையவில்லை என்றால்... வினா : தாதா, ஒருவேளை நேரடி பரிச்சயத்தில் இருக்கமுடியவில்லை என்றால், அப்போது புத்தகங்கள் உதவியாக இருக்குமா?
தாதாஸ்ரீ ! அனைத்தும் உதவும். இங்கு இருக்கும், தாதாவின் அனைத்து சாதனங்களும் (புத்தங்கள்) தாதாவின் வார்த்தைகளே. இது தான் தாதாவின் நோக்கம், அதாவது அனைத்துமே உதவிகரமாக இருக்கும்.
வினா ! ஆனால் நேரடி பரிச்சயத்திற்கும், மற்ற சாதனங்களுக்கும், இடையிலான வேறுபாடு இருக்கிறது, அல்லவா?
தாதாஸ்ரீ : வேறுபாட்டைப் பார்க்கத் தொடங்கினோமேயானால், அனைத்திலும் வேறுபாடுகளைக் காணலாம். ஆகையால் சமயத்திற்கு ஏற்றவாறு எது செய்ய வேண்டுமோ அது செய்ய வேண்டும். தாதா இங்கே இல்லாத போது நீங்கள் என்ன செய்ய முடியும்? தாதா கண்டிப்பாக புத்தகங்களில் இருக்கிறார், அவற்றைப் படியுங்கள். புத்தகங்களில் தாதாஜி இருக்கிறார் இல்லையா? இல்லையென்றால் கண்களை மூடிக் கொண்டு வேண்டுங்கள்
உடனடியாக தாதாவை காண முடியும்.
15.5 ஆணைகள் வாயிலாக உலகம் குற்றமற்றதாகும் "சொரூபஞானம்” இல்லையென்றால் உங்கள் தவறுகள் புலப்படாது. ஏனென்றால், "நான் தான் சந்தூபாய், என்னிடத்தில் எந்தக் குறைகளும் இல்லை, நான் புத்திசாலி, கௌரவமானவன்” என்ற எண்ணம் தான் மேலோங்கி இருக்கும். "சொரூபஞானம்” என்ற "ஆத்மஞானம்” அடைந்த பிறகு, நீங்கள் மனம் - வாக்கு - உடல் ஆகியனவற்றில் எந்த
29