________________
தாதாஸ்ரீ: எந்த அளவு முடிகிறதோ, அந்த அளவு "ஞானியிடம்” தனது வாழ்க்கையை கழிக்க வேண்டும், என்ற முனைப்புஇருக்க வேண்டும். இரவு பகல் என எங்கிருந்தாலும்,அவர்கள் தாதாவின் அருகிலேயே இருத்தல் வேண்டும். ஆத்ம ஞானியின்பார்வைக்குள் இருக்க வேண்டும்.
சத்சங்கத்தில் நீங்கள் அமர்ந்திருக்கும் வேளையில் உங்கள் கர்மங்களின் சுமைகள் சற்றே இளகிக் கொடுக்கும்; மற்ற இடங்களில் அதன் சுமை மிகவும் கனக்கும். நீங்கள் சத்சங்கத்தில் இருக்கும் வேளைகளில் உங்கள் வியாபாரத்துக்கு எந்த நஷ்டமும் ஏற்படாது என்ற உத்திரவாதத்தை நான் உங்களுக்கு அளிக்கிறேன். விளைவுகளை நீங்கள் அலசிப் பார்த்தீர்களேயானால், நிறைவாக உங்களுக்கு இலாபமே கிடைத்திருக்கும் என்பதை நீங்கள் உணர்வீர்கள். இது என்ன ஒரு வாடிக்கையான சாதாரண சத்சங்கமா? ஆத்மலாபத்திற்காகவே நேரத்தை செலவு செய்யும் ஒருவருக்கு எப்படி நஷ்டம் ஏற்படும்? அவருக்கு இலாபம் தவிர வேறு ஒன்றுமே ஏற்படாது. இதைப் புரிந்து கொண்டால் மட்டுமே பயன் கிட்டும். இங்கே சத்சங்கத்தில் நீங்கள் இருக்கும் வேளையில் உங்கள் நேரம் வீணாகாது, இது பொன்னான காலம். பகவான் மஹாவீரர் வாழ்ந்த காலத்தில், சத்சங்கத்தில் பங்கு பெற மக்கள் நடையாய் நடந்து செல்ல வேண்டியிருந்தது; ஆனால் இன்றோ நம்மிடத்தில் பேருந்துகள், கார்கள், ட்ரெயின்கள் என சத்சங்கம் வந்து அடைய பல வழிகள் வாய்த்திருக்கின்றன.
நேரடியான சத்சங்கத்தில் பங்கு பெறுவது தான் சிறப்பு
இங்கே அமர்ந்து கொண்டிருக்கும் போது, நீங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் கூட, உங்களுக்குள்ளே மாற்றங்கள் தாமே நிகழும், ஏனென்றால் இது சத்சங்கம்; சத் என்பது ஆத்மா,சங்கம் என்றால் சேர்க்கை. ஞானி என்பவர், (சத்) ஆத்மாவின் முழுமையான விழிப்பு நிலை வெளிப்பட்டவர் ஆவார். இது நிறைவான சத்சங்கம் என அழைக்கப்படுகிறது.
சத்சங்கத்தில் இருக்கும் வேளையில், அனைத்தும் காலியாகி விடும், ஏனென்றால் என்னருகே நீங்கள் அமர்ந்திருக்கும் போது, என்னைப் பார்க்கும் போதே உங்களுக்கு எனது சக்திகள் வந்தடையும், உங்கள் விழிப்புநிலை பலமடங்கு அதிகரிக்கும். நீங்கள் சத்சங்கத்தில் நிலைத்திருக்க முயல வேண்டும். இந்த சத்சங்கத்தில் நீங்கள் உங்களை இணைத்துக் கொண்டீர்களென்றால், உங்கள் வேலை நிறைவேறும்.
வேலை நிறைவேறுதல் என்றால் என்ன? முடிந்தமட்டும் தரிசித்துக் கொண்டிருங்கள்,முடிந்தமட்டும் சத்சங்கத்தில் நேரடியாக லாபம் பெற வேண்டும் என்று
28