________________
உங்களுக்கு இந்த அனுபவம் ஏற்படத் தொடங்கி விடும். பிறகு இந்த உடலின் சுமை, கர்மவினைகளின் சுமை அனைத்தும் உடைந்து விடும். இது இரண்டாவது அனுபவம். பிறகு ஆனந்தம் மிகப் பெரிய அளவில் ஏற்படும், அதனை சொற்களால் வர்ணிக்க இயலாது.
வினா : உங்களிடத்தில் கிடைக்கும் ஞானம், அது தானே ஆத்மஞானம்?
தாதாஸ்ரீ - உங்களுக்குக் கிடைப்பது ஆத்மஞானம் இல்லை. உங்களுக்குள்ளே ஏற்படுவது தான் ஆத்மஞானம். நீங்கள் நான் கூறுவதை திருப்பிச் சொல்லும் பொழுது உங்கள் பாவங்கள் சாம்பலாகி, உங்களுக்குள்ளே ஞானம் வெளிபடுகிறது. அது உங்களுக்குள்ளே வெளிப்பட்டு விட்டது இல்லையா? மஹாத்மா (ஆத்ம ஞானம், ஞானவிதிமூலம் அடைந்தவர்களை குறிக்கும் சொல்) :
ஆம், வெளிப்பட்டு விட்டது. தாதாஸ்ரீ : ஆத்ம அனுபவம் பெறுவது என்பது சுலபமானது என்றா நினைக்கிறீர்கள்? ஞானாக்னியில் (ஞானவிதியில்) பாவகர்மங்கள் சாம்பலாகிறது, பிறகு என்ன நடக்கிறது? ஆத்மாவும், அனாத்மாவும் பிரிக்கப்படுகின்றன, மூன்றாவதாக, இறையருள் பொழிவதால் தூண்டப்பட்ட தொடர் விழிப்புநிலை நிறுவப்படுகிறது. தூண்டப்பட்ட ஆத்மாவின் முக்தி ஆற்றல் (பிரக்ஞை), மோக்ஷம் வரை கொண்டு செல்ல மிகவும் உதவுகிறது.
அமாவாசையின் இரண்டாவது நாளில் இருந்து தொடங்கி பௌர்ணமி வரை பன்னெடுங்காலமாக, இலட்சோபலட்சம் ஜென்மங்கள் ஆகிவிட்டன, மக்கள் பல அமாவாசைகளை சந்தித்து வருகிறார்கள். அதாவது நிலவில்லா இரவுகள், இருள்சூழ்ந்த இரவுகள்,ஒளியே இல்லாது வாழ்கிறார்கள். நான் ஞானம் அளிக்கும் போது இருள் விலகி, முழுநிலவு தோன்றுகிறது. முதல் ஒளியானது, இரண்டாவது நாள் நிலவின் ஒளியளவுக்கு ஒளி வீசும். முழுமையான ஞானத்தை அளித்த பின்பும், அமாவாசையின் இரண்டாவது நாளின், இரவு நிலவொளி அளவே ஒளி ஏற்படுகிறது. பிறகு இந்தப் பிறவியில் முழுநிலவு ஏற்படும் வரை முயல வேண்டும். எப்படி அமாவாசையின் இரண்டாவது நாளுக்குபிறகு திரிதியையான 3 ஆம் நாள் நிலவு, பிறகு சதுர்த்தி, பஞ்சமி என முழுநிலவு உண்டாகிறது, அதுபோல் தான், நிறைஞானமான கேவல்ஞானம் (முழுமையான ஞானம்) ஏற்படும். எந்த ஒரு புதிய கர்மமும் ஏற்படாது. கர்மம் ஏற்படுவது நின்றுவிடும். க்ரோதம், அகந்தை, கபடம், பேராசை ஆகியவை காணாமல் போகும். நீங்கள், உங்களை சந்தூபாய் என்று கருதி வந்த அந்த மாயை விலகியது, மேற்கொண்டு நான் உங்களுக்கு அளித்த ஆணைகளின்படி இருங்கள்.
நீங்கள் ஞானவிதிக்குட்படும் போது, அனைத்து பாவங்களையும் வீழ்த்திவிட்டதால், உங்கள் தவறுகள் உங்களுக்குப் புலனாகும். நீங்கள் மோக்ஷமடைய வேண்டிய நேரம் வந்து விட்டது என்று அப்போது உங்களுக்குப் புரியும்.
20)