________________
கற்பிக்கப்படும். "நான் சுத்தாத்மா” என்ற விழிப்புணர்வு உங்களுக்குள்ளே நீடித்து நிலைக்கும்.
10. ஞானவிதியில் என்ன நிகழ்கிறது?
நான் ஞானம் அளிக்கும் போது, என்னற்ற கடந்த வாழ்க்கையின் கர்மவினைகள் சாம்பலாகி விடுகிறது; அப்போது ஆத்மாவை சுற்றி இருக்கும் அறியாமையின் பல அடுக்குகள் அழிக்கபடுகின்றன. அந்த நேரத்தில் பகவானின் கருணை பொழிந்து, ஆத்மா பற்றிய விழிப்பு நிலை ஏற்படுகிறது. விழிப்புநிலை ஏற்பட்ட பின்னர் விழிப்புணர்வு மறைவதில்லை, நிரந்தரமாக விழிப்புணர்வுடன் இருக்க முடியும். "நான் தான் சுத்தாத்மா' என்ற உறுதிப்பாடு நிரந்தரமான விழிப்புணர்வுடன் இருக்கும். ஆத்ம அனுபவத்தால், "நான் இந்த உடல்” என்ற உணர்வை அழித்துவிடுவதால், அதனால் புதிய கர்மங்களின் பாதிப்பை நிறுத்திவிடுகிறது. அஞ்ஞானத்திலிருந்து முதல் முக்தி ஏற்படுகிறது, பின்னர் இரண்டொரு பிறவிகளில் இறுதி முக்தி பிறக்கிறது.
ஞானாக்னியில் கர்மங்கள் பஸ்மமாகின்றன
இந்த ஞானம் வழங்கப்படுகிற அன்று என்ன நடக்கிறது? ஞானாக்னியால் கர்மங்கள் பஸ்மமாகிறது; இந்த நிகழ்வில் மூன்று வகையான கர்மங்களில் இருவகை கரமங்கள் சாம்பலாகின்றது. ஆனால் ஒரு வகையான கர்மவினை எஞ்சியிருக்கிறது. மூன்று வகையான கர்மங்களை, உதாரணமாக இணையாக்கினால், நீர், நீராவி, பனிக்கட்டி போல இருப்பதாகும். நீராவி, மற்றும் நீரைப் போல் இருக்கும் கர்மம் அழிகிறது, ஆனால் பனிகட்டி போல் இருக்கும் கர்மம் அழிவதில்லை, ஏனென்றால் அது திரண்டு திடவுருவாகி இருக்கிறது, பலனளிக்க தயாரான நிலையில் இருப்பதால் அந்த கர்மத்தில் இருந்து தப்பித்துவிட முடியாது. ஆனால் நீர் போலவும், நீராவி போலவும் இருக்கும் கர்மங்களை ஞானாக்னி முடிவுக்கு கொண்டு வருகிறது, ஆகையால் தான் ஞானம் அடைந்தவுடனேயே மக்கள் லேசாக இருப்பதை போன்ற உணர்வு பெறுகிறார்கள், அவர்களின் விழிப்புநிலை சட்டென்று பெருகிவிடுகிறது. கர்மவினைகள் சாம்பலாகாத வரையில், மனிதனின் விழிப்பு நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதில்லை. பனிக்கட்டி வடிவத்திலான கர்மத்தை நாம் அனுபவித்துத் தான் ஆக வேண்டும். அதையுமே கூட எப்படி எளிமையாக அனுபவிப்பது என்பது தொடர்பான அனைத்து வழிகளையும் நான் விளக்கியிருக்கிறேன், "தாதா பகவானின் எல்லையில்லாத கருணை, வாழ்க, வாழ்க" என்று முழங்குங்கள், த்ரிமந்திரத்தைக் கூறுங்கள், நவகலமோ (ஒன்பது ஆழமான உள்நோக்கங்களை) கூறுங்கள்.
துக்கங்களை அலட்சிய படுத்துதல் தான் முக்திநிலையின் முதல் அனுபவம் என்று சொல்லப்படுகிறது. நான் உங்களுக்கு ஞானம் வழங்கிய அடுத்த நாள் முதலாகவே
19