SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 448
Loading...
Download File
Download File
Page Text
________________ 34) वीर ज्ञानोदय ग्रन्थमाला சிறிதுநாட்கள் கழிந்த பிறகு ஆசார்ய ஸ்ரீ அவர்கள் சங்கம் ஜயபூர் நகரத்திலிருந்து புறப்பட்டு மாதோ ராஜபுரா' என்னும் இடத்தில் தங்கியது. அங்குவந்த பிறகு ஷூ. வீரமதி அம்மையார் தனக்கு ஆர்யிகை தீக்ஷை கொடுக்கும்படி மன்றாடி கேட்க ஆசார்ய ஸ்ரீ அவர்களுக்கும் அம்மையார் ஆர்யிகைத் துறவு நெறியை தி.நம்பிக்கயுடன் காப்பாற்றுவார் என்கிற நம்பிக்கையும் ஏற்பட்டது. வைசாக மாதம் சுக்ல பக்ஷம் த்விதியையன்று நல்ல முகூர்த்த வேளையில் ஆர்யிகை தீக்ஷை கொடுத்து ஆர்யிகை ஞானமதி எனப் பெயர் சூட்டினார். ஆசார்ய ஸ்ரீ அவர்கள் ஆர்யிகை தீக்ஷை கொடுத்து ஆசீர்வதிக்கும்போது கூறியாதாவது, ஞானமதி நீ தன்னுடைய பெயருக்கு ஏற்றவாறு நல்ஞானம்பெற்று பாரததேசம் முழுதும் ஞான ஒளி பரப்பும் செயலில் ஈடுபடுவாயாக என்றார். இது இவருடைய அறப்பாதையில் கண்ட மூன்றாவது வெற்றியாகும். ஆசார்ய ஸ்ரீ அவர்களின் நல்லாசி பெற்ற ஆர்யிகை ஞானமதி அம்மையார் தம் ஞானத்தை வளர்த்துக் கொள்ளும் நற்பணியில் ஈடுபட்டு சித்தாந்த நூல்களை வசிப்பது தவம் தியானம் தத்துவசர்சை செய்வது தம் சங்கத்தாருக்கு கற்பிப்பது பிரவசனம் செய்வது ஆகிய ஞான வளர்சிக்கு ஏற்ற செய்ல்களைச் செய்துவந்தார். ஆசார்ய ஸ்ரீ அவர்களின் ஆசிர்வாதத்தின் பயனால் பூஜிய மாதாஜீ அவர்கள் தம் வாழ்க்கையில் ஞானஜோதியை வளர்ந்து இன்று அவர் செய்துவரும் நற்பனிகள் கலங்கரை விளக்கம்போல் காட்சி அளிக்கிறது என்றால் பிகையாகாது. தன்னுடைய பெயருக்கு ஒத்த பணியில் ஈடுபட்டு ஞானக்கடலில் முழ்கி இருந்த அம்மையார் அறநூல்களில் உள்ள கடினமான சொற்களின் பொருளையும்கூட நன்கு விளக்கிக் கூறும் அற்றல் பெற்றார். அவர் தம் இளம்வயதில் போட்ட கல்வியின் அடிப்படையை உறுதிபடுத்த 'காதந்திர ரூபமாலா' என்னும் சமஸ்கிருத இலக்கண நூலை படித்து படித்ததை சிந்தித்து அவைகளை உள்ளத்தில் பதிய வைத்தக் கொண்டார். தம் சீடருக்கு படம் கற்பிக்கும் மணியில் ஈடுபாடு கொண்டிருந்ததினால் அவருடைய ஞானம் மேன் மேலும் வளர்ந்து பலம் வாயந்ததாக அமைந்த்து. சாணக்கல்லில் அடிக்கடி தீட்டிய கத்தி கூர்மை ஆவது போன்று பிறருக்கு தற்பித்து கற்பித்து தன்னுடைய ஞானத்தை உறுதிபடுத்திக் கொண்ட இவர் இந்த முறையையே தம் வாழ்க்கையில் அன்றாடக் கடமையாக இன்றும் செய்து வருகிறார். சங்கத்திலிருந்த துறவறம் மேற்கொண்ட ஆண்பெண் இருபாவாருக்கும் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதிக்ரமணம் கர்பித்து வந்தார். அப்பொழுது சங்கத்தில் ஷுல்லக் சன்மதிசாகர்ஜீ. ஷூ, சிதாநந்தஜீ (அசார்ய கல்பஸ்ருத சாகர் ஷுல்லக்காக இருந்தபோது) ஷல்லிகை சந்திரமதிஜீ, க்ஷ. ஜினமதிஜீ, பத்மாவதீஜீ ஆகியோர் இருந்தனர். இவர்களைத் தவிர மதியவயதை அடைந்த ஆர்யிகைகளும் இருந்தனார். மேலும் இவர் பூஜ்ய மதாவீர கீர்த்தி முனிபுங்தவரிடம் ராஜவார்திகம் அஷ்டசகஸ்ரி முதலிய மாபெரும் தத்துவ நூல்களையும் பயின்றார். மேலும் இவர் ஆசார்ய சிவசாகர் முனிவர் சங்கத்தில் இருந்துகொண்டு 'கிர்நார்' யாத்திரை செய்தார். சிலநாட்கள் அவர் சங்கத்தில் இருந்த பிறகு ஆசார்யரிடம் அனுமதிபெற்று சில ஆர்யிகைகளுடன் 'சம்மே தசிகர' யாத்திரைக்குப் புறப்பட்டார். இவர் கி.பி. 1963ல் கல்கத்தா நகலில் முதல் சாதுர்மாத வர்ஷாயோக தவம் நகர ஜைனப் பெருமக்கள் இவரை பாராட்டிப் புகழ்ந்தனர். தென்னிந்திய திருப் பயணம். வந்தனைக்குறிய ஞானமதி மாதாஜீ அவர்கள் தென்னிந்திய திருத்தலங்களை தரிகிக்க வேண்டுமென்கிற அவர் கொண்டு கல்கத்தா நகரத்தில் தம் சாதுர்மாத விரதத்தை முடித்துக் கொண்டு தென்னிந்திய பயணத்தைத் துவங்கினார். தம் ஆர்யிகை சங்கத்துடன் ஆந்திர மாநிலத்தில் உள்ள 'ஹைதராபாத்' நகரம் வந்துசேர்ந்தார். அங்கு கி.பி. 1964 ஆம் ஆண்டு இரண்டாம் சாதுர்மாத தவம் மேற்கொண்டார். அப்பொழுது இவருக்கு 'சங்கிரஹணி' என்னும் கடும் நோய் ஏற்பட்டது. இந்த நோயினால் துண்பப்பட்ட இவர் பிழைப்பாரா என்னும் கேள்வி பக்தர்க', 'டய உள்ளத்தில் ஏற்பட்டது. பக்தர்கள் இவருக்கு சேவை செய்துக்கொண்டே வந்தனர். மாதாஜீ அவர்கள் தம் ஆன்மசிந்தனையில் ஆழ்ந்து இருந்தார். இவர் சாதனையின் நற்பயனாக ஸ்ராவண மாதம் சுக்லபக்ஷம் சப்தமியன்று முழு ஆரோக்கியம் பெற்று உத்சாகமாக காணப்பட்டார். அப்பொழது ஆசார்ய ஸ்ரீ சிவசாகர் மகாராஜரிடம் அனுமதி பெற்று (தம் குடும்பத் தொடர்பில் தங்கையாகிய) பிரம்மசாரிணீ மனோவதிக்கு ஷுல்லிகை தீக்ஷை விதிகளை தம் கைகளாலேயே நிறைவேற்றி தீக்ஷை கொடுத்து டி. அபயமதி எனப் பெயர் வைத்தார். அதன் பிறப் பூஜ்ய ஞானமதி மாதாஜீ அநேக ஆண் பெண் இருபாலாருக்கும் அறபோதனை செய்து அவர்களை ஆன்மநலம் பெரும் பாதையில் திருப்புவதில் வெற்றி பெற்றார். Jain Educationa international For Personal and Private Use Only www.jainelibrary.org
SR No.012075
Book TitleAryikaratna Gyanmati Abhivandan Granth
Original Sutra AuthorN/A
AuthorRavindra Jain
PublisherDigambar Jain Trilok Shodh Sansthan
Publication Year1992
Total Pages822
LanguageHindi
ClassificationSmruti_Granth
File Size26 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy