SearchBrowseAboutContactDonate
Page Preview
Page 446
Loading...
Download File
Download File
Page Text
________________ 36] वीर ज्ञानोदय ग्रन्थमाला 'விளையும் பயிர் முளையிலேயே' என்கிறபழுமொழிக்கு ஏற்க மைனாவிற்கு தன்னுடைய ஆன்ம சக்தியை வெளிப்படுத்துவதற்கு எற்ற சூழ்ந்லையும் கிட்டியது நற்சீல கதை. நற்காட்சிக்கதை ஆகியவைகளைப் படித்துவந்து அந்த செல்வியின் உள்ளத்தில் அசையா அறநெறிப்பற்று ஏற்பட்டுவிட்டது, ஒருநாள் பகவான் எதிரில் நின்றுகொண்டு நங்கை மைனா கூறியதாவது, பகவன்! இப்பொழுது எனகு திகம்பர குடுயாடும் கிடைக்கவில்லை ஆதலால் நான் உன் எதிரில் நின்று சீலவிரதத்தை ஏற்றுக்கொள்ளுகிறேன் என்று கூறி விரதம் ஏற்றாள். அன்று முதல் நல்வொமுத்த நெறியில் ஒழுகலானாள். அகளங்கர் நாடகக் காட்சியால் ஆன்மநெறிப்பெற்ற அதிசயம். ஒருநாள் தருமபாடசாலையில் பயின்ற பிள்ளைகள் அகளங்கர் நிஷ்களங்கர் நாடகம் நடத்தினர். அதைப் பார்க்கும் வாய்ப்பு மைனாவிற்குக் கிடைத்தது. அந்த நாடகத்தின் ஒருகாட் இயில் அகளங்கர் கூறியதாவத். 'பஷாலநார்த்தி பங்கள்ய தூராத ஸ்பர்சனம் வரம்' இதன் பொருள். சேற்றில் காலைவைத்த பிறகு அதை கழுவுவதைக் காட்டிலும் சேற்றில் சைலை வைக்காமலேயே இருப்பது நல்லது. இந்த நீதிவாக்கியத்தைக் கேட்டகெல்வி மைனா) முடிவுகொண்டதாவது திருமணம் செய்துகொண்டு துள்புற்ற பிறகு தீனக்ஷ ஏற்பதைக் காட்டிலும் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே தீக்ஷை ஏற்பது சாலச் சிறந்தது என்பதாம். இந்த மிடிவிற்கு வந்துமைனா மங்கைக்கு வயது பதிநானகு. அன்று முதல் பத்மந்தி பஞ்சவிடம் சதிகா சஹடால் ஆகிய அறநால்களை வாகித்து நற்காட்சியின் மாட்சியை அறிந்து ஆன்ம் இத்தனையில் ஆழ்ந்தாள். பொய் நெறியைப் போக்கிய பெண் உருவதைய்வம். ஒருநாள் டிகைத் நகரத்தில் சோடேலால் அவர்கள் விட்டிற்கு பக்கத்து வீட்டு பதினாறு வயது இளைஞனுக்கு அம்மை நோய் கண்டது அதைப் போக்க அவ்விட்டிலுள்ளவர்கள் வேப்ப மரத்தையும் சிதலாமாதா வையும் பூஜித்து வந்தனர். அப்பொழது மைனாவின் சகோதரர்களாகிய பிரகாசுக்கும் சுபாசுக்கம் அதே நோய் கண்டது அந்த நோயைப் போக்கிவர்தம் குடும்பத்தும் உள்ளார் உறவினரும் சிதளாமாதாவுக்கும் வேப்ப மரத்திற்கும் பூஜை செய்ய முற்பட்டனர் அதைக் கண்ட மைனா இது பொய்நெறி தினந்தோறும் ஜினாலயம் சென்று சீதளநா பகவானுக்கு அபிஷேக மும்ழஜையும் செய்து கந்தோதகத்தைக் கொண்டு வந்து அம்மை நோய்கண்ட சகோதரர்கள் மீது தெளித்துவந்தாள் ஆனால் நோய்குணமடையவில்லை அதிக மாய்விட்டது விட்டிலுள்ளவர்கள் மைனாவை கடிந்து பேச ஆரம்பித்தனர். நீ சகோதரர்களை சாகவைக்கத் துணிந்து விட்டாய் இதளாமாதா தெய்வத்தையும் வேம்புவையும் பூஜித்தால் தான் இந்த நோய் நீங்கும் இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது என்றனர் இதற்கெல்லாம் மைனா அஞ்ஜவில்லை உற்றாருடைய வார்த்தைகலையும் நம்பவில்லை. ஒரு நாள் அதிகாலை நீராடி வழக்கம்போல் ஜினாலயத்திர்குச் சென்று பகவானிடம் முறையிட்டாள் மைனா. பகவான்! இப்பொழது நன்நெறியைக் காப்பது உன்கையில் தான் உள்ளது என்றுடைய சகோதரர்களுக்கு நேரக் கூடாத்து நேர்ந்து விட்டால் அம்மை நோய் நிங்க மக்கள் பொய்நெறியை தழுவுகிறார்களே அது உண்மையாகிவிடும் மித்யாத்வம் தான் அதிகமாக பரவ ஆரம்பிக்கும் இது நியாயம்தானா? என்றெல்லாம் கூறி நன்நெறி வழிதான் சாலச்சிறந்த்து என்பதை நீ திருபித்துக் காட்டவேண்டும் என்றெல்லாம் முறை இட்டனள். உண்மை பக்திக்கு உயர்வு உண்டு என்கிர நீதிக்கு எடுத்துக் காட்டாக இல நாட்டகளுக்குப் பிறகு அந்த இரண்டு சகோதரர்ரகளும் அம்மை நோயிலிருந்து தேறிவிட்டனர் ஆரோக்கியமடைந்தனர் ஆனால் பக்கத்து வீட்டு இளைஞள் இறந்துவிட்டான் இந்த சம்பவத்தனால் எல்லாவருடைய மனதிலும் தன்தெறியில் பற்று ஊண்றியது நல்லறம் காப்பாற்றப்பட்டது கிராம மக்கள் அனைவரும் மைனாவை பாராட்டினர் எல்லோரும் பொய் நெறியை விட்டு நன்நெறிவழி திரும்பினர். மித்தியாத்வத்தைப் போக்கிய சிறப்பு மைனாவிற்கே கிடைத்தது. ஒருநாள் பண்டித மணோஹர் லால்ஜீ என்பவர் மைனாவின் வாயிலாக பொய்நெறியின்விளக்கம் கேட்டு வியப்படைந்தார் இளம் வயது பெண்னிடம் இவ்வளவு ஞானமா பலே பலே என்றல்லாம் பாராட்டி அவருடைய குடும்பத்தினரை அழைத்து உங்கல் வீட்டில் பிறந்த மைனா ஒரு பெண் அல்ல ஒரு தேவியே பிறந்துள்ளது என்று கீறி அவர்களை மகிழச் செய்தார். சிறிய வயதிலிருந்தே மைனாக் கண்டவாது பகவானிடம் முறையிடுவது வழக்கம். பகவன்! நான் இந்த மாநிலமட்டுமல்ல தேசம் முழுதும் ஜைன நெறியை உல்கநன் நெறியாக ஆகும்படி பரப்ப வேண்டும் அதற்கு ஏற்ற அற்றல் எனக்கு எப்பொழுது கிடைக்கும் உன்னுடைய அருள்நெறிதான் எநக்கு துணை நிற்கவேண்டும் என. கண்ட கனவின் பலன் பெறப்பட்டது. ஒருநாள் மைனா நங்கை கனவில் கண்தாவது தான் வெள்ளைப் புடவை அணிந்து கொண்டு கையில்பூசனைப் பொருட்களை. ஏந்திக் கொண்டு ஆலயம் செல்வது போலவும் ஆதாயத்தில் ஒளிதரும் முழுநிலா தன்னைத் தொடர்ந்து வந்துக் கொண்டு அதன் ஒளி தன்மீதுமட்டும் விழுவது போலவும் இக்காட்சியை அக்கம்பக்கத்து மக்கள் கண்டு வியப்புடன் தன்னையே பார்த்தக் கொண்டிருப்பது போலவும் இருந்த்து கனவு காட்சி. Jain Educationa international For Personal and Private Use Only www.jainelibrary.org.
SR No.012075
Book TitleAryikaratna Gyanmati Abhivandan Granth
Original Sutra AuthorN/A
AuthorRavindra Jain
PublisherDigambar Jain Trilok Shodh Sansthan
Publication Year1992
Total Pages822
LanguageHindi
ClassificationSmruti_Granth
File Size26 MB
Copyright © Jain Education International. All rights reserved. | Privacy Policy