________________
गणिनी आर्यिकारत्न श्री ज्ञानमती अभिवन्दन ग्रन्थ
(RR
இல்லறம் துறவறம் நெறிகளைப் பின்பற்றுபவர் நான்கு சங்கங்களாக வகுபப்பட்டுள்ளனர். முனிவர் ஆர்யிகை ஸ்ராவகர் ஸ்ராவிகியர் என இந்நான்கு சங்கமும் இருக்கும் இடம் அறவளர்ச்சி பெற்றதாக இருக்கும். ஆற்றில் இரு கரைகளுக்குட்பட்டு ஓடும் நீர் கடலை அடைகிறது. அது போல இல்லறம் துறவறம் என்னும் இருகரைகளுக்குட்பட்டு நடக்கும் மக்கள் சமுதாயம் சித்த லோகத்தை அடையும். இல்லறத்தாருக்கு திறவறத்தாரின் தொடர்பு விடுபட்டுவிடின் கரையை அறுத்துக் கொண்டு ஓடும் நீர் எங்கு செல்லுமோ? அதுபோல இவர்கள் நிலையும் ஆகிவிடும்.
தற்பொழுது நிகழும் பஞ்சமகாலத்தில் தீர்தங்கரர்கள் தோன்றுவதில்லை. ஆனால் அவர்கள் வகுத்துத் தந்த அறப்பாதையைப் பரப்பும் துறவியர் இக்காலத்தில் அவசியம் உள்ளனர் இடையில் விடுபட்டிருந்த அத்துறவியர் பாரம்பர்யத்தை மறுபடியும் துவக்கி வைத்தவர் ஆசார்ய சாந்தி சாகர முனிபுங்கவராவர். அவர் தம் பரம்பரையில் வந்த அமரர் ஆசார்ய தேசபூஷன் முனிவராவர். அவர் சிடரில் பெண்துறவியாகிய ஆர்யகைமணி ஞானமதி மாதஜீ அவர். அரயிகை ரத்ன ஞானமதி மாதாஜீ
உத்தர பிரதேசத்தில் டிகைத் நகரம் என்னும் இடத்தில் கி.பி. 1934-ஆம் ஆண்டு சரத்பூர்ணிமா என்னும் பௌர்ணமி நாளன்று இம்மண்ணுலகில் தனகுமார் என்னும் ஸ்ரேஷ்டியின் புதல்வராதிய திரு சோடேலால் அவருக்கும் திருமதி மோகினி அம்மையாருக்கும் பிறந்த இந்த பெண்குழந்தை வின்னுலகத்து தேவி போன்று காட்சி அளித்தது. அக்குழந்தைக்கு மைனா எனப் பெயர் சூட்டப்பட்டது.
வின்னிலக தேவியறைப் போன்று தோன்றிய இந்த குழந்தையைக் கண்ட ஊர் மக்கள் பாராட்டாதவர் எவரும் இல்லை. ஒரு விட்டில் பெண் குழந்தை பிறந்தால் பொதுவாக கொஞ்சம் நாட்கள்வரை மகிழ்ச்சியற்ற சூழ்நிலை நிலவும். ஆனால் இவ்வில்லத்தில் அத்தகு சூழ்நிலை இல்லை. தொடக்கமற்ற காலம் தோட்டு இவ்வுலகில் ஆண்களைப் போன்று பெண்களும் மாபெரும் வீரதீரச் தெய்தளைச் செய்து இம்மண்னுலகிற்கு பேரும் புகழும் தந்துள்ளனர் என்பதை வரலாற்று மூலம் அறியலாம் அந்நிலையில் பெண் குழந்தை பிறநாதால் சோகம் கெள்ளுவது பொருத்தமா?.
அன்னை மோகினி தேவி மைனா குழந்தையை நன்குபராமரித்து வந்தார். தொட்டிலில் குழந்தையை உறங்க வைக்கும்போது தொட்டிலை ஆட்டிக் கொண்டே பக்காமரம் ஈறாறு சிந்தனைப்பாட்டு நல்லொழுக்கம் நிறம்பிய அறநெறிக்கதைகலை ஆதாரமாகக் கொண்ட தாலாட்டு பாட்டு பாடுவது வழக்கம். 'குழந்தைக்கு முதல் ஆசான் அதன் அன்னையே' என்கிற பழமொழிக்கு ஏற்க அன்னை மோகினி அம்மையார் மைனா நங்கைக்கு குழந்தை பருவத்திலேயே நல்ல பழக்க வழக்கங்களை ஊட்டி வந்தார். எட்டு வயதிலேயே வீட்டிலிருந்த பொய் நெறிகளையப் பட்டது.
மைனா நங்கை எட்டு வயதை அடைத்ததுமே நல் ஞானத்தின் பயனால் தன்னுடைய வீட்டில் பாரம்பர்யமாக நிகழ்ந்துவந்த பொய்மை (மித்யாத்வம் (அ) கண்மூடித்தனம்) நிரம்பிய கிரியைகளை நீக்கி நன்னெறிகளைப் பறப்பிய நல்லற நங்கை ஆனார். இவர் செய்த இச்செயலைக் கண்ட இவர் பாட்டி அம்மையார் கூறியதாவது பரம்பரையாகவந்த பழக்க வழக்கங்களை நீக்கிவிடாதே. இதைக் கேட்ட மைனா நங்கை கூறியதாவது, அனந்த காலமாக தொன்று தொட்டு இந்த ஜீவன் குருட்டுநம்பிக்கையை பின்பற்றி வந்ததால் தான் அனந்த பிறவிச்சுழலில் உழுன்று துன்புற்றுக்கொண்டே வருகிறது. உலகிலேயை மிக அரிதாக கிடைக்கக் கூடிய சிந்தாமணி ரத்தினத்திற்கு ஒப்பான எளிதில் கிடைக்காத மனிதப் பிறவி இப்பொழுது கிடைத்துள்ளது. இப்பிறவியில் நன்நெறிப் பாதையாகிய நற்காட்சி பெறாவிடில் மேலும் மேலும் அனந்த பிறவிச் சுழலில் (சம்சார துன்பத்தில்) உழல நேரிடும் என்கிற பல திருத்தங்களுடன் கூடிய வார்த்தைகளைக் கூறி தன் பாட்டி அம்மையாரை பொய்நெறியிலிருந்து நன்நெறிப் பாதைக்குக் கொண்டுவந்தாள்.
மைனா நங்கை இளம் வயதிலேயே எப்பொழுதும் நல்லொழுகம் நிறம்பிய நன்நெறிக் கதைகளையும் தோத்திரப் பாக்களையும் படிப்பது வழக்கம். இதனால் இளம் வயதிலேயே ஜினவாணியின் வரபிரசாதத்தைப் பெற்றாள் வீட்டுப்பணிகளில் தன்னுடைய தாயாருக்கு உதவி செய்துக் கொண்டே மான்புமிக்க மங்கையர் படிக்கும் ஆகம நூல்களில் உள்ள நுண்ணிய கருத்துக்களைக் கேட்டு களிப்படைவது வழக்கம்.
ஆன்மிக ஞானத்தில் கவரப்பட்ட நங்கை.
ஒருநாள் ஜினாலத்தில் ஒரு வித்வான் சாஸ்திரம் படித்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் கூறியாதாவது ஒவ்வொரு பிராணியின் ஆன்மாவில் அனந்த சக்தி (வரைக்கு அப்பார்பட்ட சக்தி) உள்ளது பாலில் நெய் மறைந்து இருப்பது போள்து இப்பொழுது அது உள்ளது.
இதைக் கேட்ட செல்வி மைனா சிந்திக்கலானாள். இந்த ஆன்மாவில் மறைந்து இருக்கும் அனந்த சக்தியை நாம் வெளிப்படுத்த வேண்டும் என்கிற திட எண்ணம் கொண்டு அன்றையலிருந்து பெரிய பெரிய ஆகம நால்களைப் படிக்கத்துவங்கினாள்.
Jain Educationa international
For Personal and Private Use Only
www.jainelibrary.org.