________________
பரம பூஜனீய தாதா பகவான் (தாதாஸ்ரீ) அடிக்கடி கூறுவார், தெரிந்தோ தெரியாமலோ யாரையாவது அவதூறு செய்திருந்தால், அவர்கள் அனைவரையும் ஆராதனை செய்து விட்டால், செய்யப்பட்ட அனைத்து அவதூறுகளும் அழிந்து விடும். இப்படிப்பட்ட பாரபட்சிமில்லாத த்ரிமந்திர் சென்று, அனைத்து பகவான்களின் மூர்த்திகள் முன்பாக இரண்டு கைகள் குவித்து தலைவணங்கினால், நமக்குள்ளே இருக்கும் அனைத்துக் குறைகளும், தீய எண்ணங்களும், வேறுபாடுகளும் தகர்ந்து போகும்.
தாதா பகவான் குடும்பத்தின் முக்கியமான நடுநிலையமாக த்ரிமந்திர், அடாலஜ் என்ற இடத்திலே இருக்கிறது. குஜராத் மாநிலத்தில் அஹ்மதாபாத், ராஜ்கோட், மோர்பீ, புஜ், கோத்ரா, பாதரண், சலாமயீ, வாஸணா ஆகிய இடங்களிலும், பாரபட்சமில்லாத த்ரிமந்திர்கள் இருக்கின்றன. மும்பை, சுரேந்த்ரநகரிலும் த்ரிமந்திர் அமைக்கும் பணி விரைந்து நடைபெற்று வருகிறது.
ஞானவிதி என்றால் என்ன? - இது பேதஞானம் என்ற பிரயோகம், இது வினா-விடை சத்சங்கத்திலிருந்து
வேறுபட்டது. - 1958 ஆம் ஆண்டு வெளிப்பட்ட பரமபூஜனீய தாதா பகவானின் ஆத்மஞானம், இன்றும் கூட அவரது கருணையாலும், பூஜ்ய நீரூ அன்னையுடைய ஆசிகளாலும், வணக்கத்திற்குரிய தீபக்பாய் மூலமாகவும் கிடைக்கப் பெறுகிறது.
ஞானம் ஏன் பெற வேண்டும்? - பிறப்பு-இறப்புகளில் இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவதற்கு - நானே ஆத்மா என்ற விழிப்புநிலை அடைய > குடும்பத் தொடர்புகள், பணிச்சுமைகளில் சுகம் - அமைதியை அனுபவிக்க
ஞானவிதியால் என்ன கிடைக்கிறது? - ஆத்ம விழிப்புநிலை உண்டாகிறது - சரியான புரிதல் மூலமாக வாழ்க்கை வழிமுறைகளை நிறைவு செய்யக் கூடிய
திறவுகோல் (சாவிகள்) கிடைக்கிறது. - எண்ணற்ற ஜென்மங்களின் பாவங்கள் சாம்பலாகின்றன. - அஞ்ஞானம் ஏற்படுத்திய தவறான புரிதல்கள் விலகுகின்றன. - ஞானம் விழித்துக் கொண்டதால், புதிய கர்மங்கள் ஏற்படுவதில்லை, பழைய கர்மம் கழியத் தொடங்குகின்றன.
56