________________
முன்னேற்றமும் காணாது, நின்று கொண்டே இருக்க நேரும். இது வெறும் அஹங்காரத்தின் வெளிப்பாடு.
தவறான நம்பிக்கைகளின் முற்றுகை தான் மோக்ஷ மார்க்கம்
அனைத்து கேள்விகளின் முடிவுதான் மோக்ஷ மார்க்கம். புத்தி உங்களுக்கு எப்பொழுது எல்லாம் நியாயத்தை தேடுகிறதோ, அப்பொழுது எது நடக்கிறதோ அதுவே நியாயம், என்று அதனிடம் கூறுங்கள். புத்தி நியாயத்தேடலில் ஈடுபடும், இவர் என்னை விடச் சிறியவர், எனக்கு மரியாதை அளிப்பதில்லை என்று. அவர் மரியாதை அளித்தாலும் நியாயம், அளிக்கவில்லை என்றாலும் நியாயமே. எந்த அளவுக்கு புத்தி குறைவாக வாதம் புரிகிறதோ, அந்த அளவுக்கு புத்தி விகல்பம் இல்லாததாகும்.
நியாயம் தேடிப் புறப்பட்டால், உங்கள் முன்பு அதிகத் தேர்வுகளும் மாற்றுக்களும் ஏற்படும். இயற்கையின் நீதி, மாற்றுக்கள் இல்லாத நிலையை நோக்கிக் கொண்டு செல்லும். நடந்து முடிந்தவை தான் நியாயம். இயற்கை, அனைத்துக் கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கிறது. மேலும், மத்தியஸ்தம் செய்ய ஐவரை நியமித்தால், தீர்ப்பு அவனுக்கு எதிராகவே முனையும், துயரங்கள் மேலும் அதிகரிக்குமே தவிர, குறையாது. அவர் யார் கூறுவதையும் ஏற்றுக் கொள்ள மாட்டார். அந்த வகையில் அவரது பிரச்சனைகள் அதிகரித்து, அவர் மேலும் மேலும் பிரச்சனைகளின் வலையில் வசமாக சிக்கிக் கொள்ள நேரும், அவதிப்பட நேரும். மாறாக அவர் முதலிலிருந்தே நடந்து முடிந்ததை, நீதியாக ஏற்றுக் கொண்டு நடக்க வேண்டும்.
உ
இயற்கை என்றுமே நீதிப்படியே நடந்து வருகிறது, நிரந்தரமாக நியாயம் அளித்து வருகிறது; ஆனால் இதற்கான சான்று விளக்கங்களை, அதனால் அளிக்க இயலாது. இதற்கான சான்று விளக்கங்களை, ஒரு ஞானியால் மட்டுமே அளிக்க இயலும். எப்படி இது நியாயமாகும் என்று அவரால் மட்டுமே கூற முடியும். உங்கள் வினாக்கள் அனைத்துக்கும் விடை கிடைத்தால், நீங்கள் சுதந்திர மனிதன்.
பாதிக்கப்படுபவரின் தவறே
இயற்கையின் நீதிமன்றத்தில்.....
உலகில் பல நீதிபதிகள் இருக்கின்றார்கள், ஆனால் கர்ம உலகத்தில், ஒரே ஒரு இயற்கை நீதி தான் இருக்கிறது: "பாதிக்கப்படுபவரின் தவறே”. இது ஒன்றே நியாயம், இதன் வழியே, அனைத்துலகம் இயங்குகிறது, மாறாக, உலக நீதியோ, மாயையான ஒன்று. இது தான் உலகை நீடிக்கச் செய்கிறது.
47