________________
நீதியைத் தேடி மனிதன் அலையும் போது தான் உலகில் போர்களும், போராட்டங்களும், பூசல்களும் ஏற்பட்டிருக்கின்றன. உலகம் நீதிமயமானது. ஆகையால் இந்த உலகில் நீதி எங்கே, எனத் தேடி அலையாதீர்கள். எது நடந்ததோ, எது நடக்கிறதோ, அவையனைத்துமே நீதி தான், நியாயம் தான். இந்த நீதியைத் தேடித் தான் மக்கள் சட்டங்களையம், நீதிமன்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறார்கள்; ஆனால் அவற்றில் நீதி இருப்பதாக நினைத்துக் கொண்டால், அது நம் முட்டாள்தனம். மாறாக, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும், அதுவே நீதி. நியாயம், அநியாயம், அது பூர்வ ஜென்ம கர்ம பலன்களாகும். நாம் அவற்றுடன, இந்த ஜென்மத்தின் கணக்கை ஒப்பிட்டு நியாயத்தை தேடுகிறோம். நீங்கள் பிறகு நீதிமன்றம் தானே செல்ல வேண்டும்!
நீங்கள் ஒருவரை ஒரு முறை திட்டினால், அவர் உங்களை 2-3 முறை திட்டுவார். ஏனென்றால் அவர் மனதில் உங்களுக்கு எதிராக நிறைய கோபம் இருக்கிறது. அப்போது மனிதர்கள் என்ன சொல்வார்கள்? இவர் ஒருமுறை தானே திட்டினார், அவர் ஏன் 3 முறை திட்டினார் என்பார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது, இல்லையா? நம்மை அவர் 3 முறை திட்டியதின் காரணம் என்ன? பழைய கணக்கு முழுவதையும், பாக்கி இல்லாமல் கொடுப்பது தான் இயற்கையின் நீதி. ஒரு பெண் தன் கணவருக்குத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தால், அதுவும் இயற்கையின் நியாயம். மனைவி மோசமானவள் என்று கணவன் கருதுகிறார், மனைவியும் தன் கணவன் மோசமானவன் என்றே கருதுகிறார். ஆனால் இந்த நிகழ்வுகள் முழுவதும் இயற்கையின் நீதி.
இந்தப் பிறவியின் கடும் உழைப்பின் பலன் இது, ஆனால் கடந்த பிறவியின் கணக்கு வேறு இருக்கிறது. நம் முன் ஜென்ம கணக்கு பாக்கி இருக்கிறது, இல்லையெனில் நம்முடைய இருப்பில் இருப்பதை யாராலும் எதையும் எடுக்க முடியாது. யாரிடத்திலும் எதையும் எடுத்துச் செல்லும் சக்தி கிடையாது, அப்படி ஏதாவது எடுக்கப்பட்டால், அது முந்தைய கணக்கின் காரணமாகவே. இந்த உலகில் மற்றவர்களுக்கு தீயது விளைவிக்க கூடிய ஒருவர் இதுவரை பிறந்ததில்லை. இயற்கை அந்த அளவு துல்லியமாகவும், விதிமுறைக்குட்பட்டும் உலகை செயல்படுத்துகிறது.
விளைவுகளைக் கொண்டு காரணத்தை அறிய முடியும் அனைத்தும் விளைவுகள் தாம்; தேர்வுகளின் முடிவுகளைப் போன்றவை. கணக்குப் பாடத்தில் 95 மார்க்குகளும், ஆங்கிலப் பாடத்தில் 25 மதிப்பெண்களும் கிடைத்திருக்கிறது; இவற்றிலிருந்து நீங்கள் எங்கே தவறு செய்திருக்கிறீர்கள் என்று புரியாதா? இதைப் போலவே வாழ்க்கையில் ஏற்படும் விளைவுகளைக் கொண்டு, இதன் காரணங்கள் நமது தவறுகளே
44