________________
உங்கள் தவறை நீங்கள் திருத்திக் கொண்டால் தான் உங்களால் அனுசரிக்க முடியும். அனைத்து இடங்களிலும் அனுசரித்துச் செல்லுங்கள் என்பது தான் பகவான் மஹாவீரர் அளிக்கும் செய்தி. அனுசரித்துச் செல்லாமல் இருப்பது என்பது மூடத்தனம். அனுசரித்தல் தான் நீதி. எந்த ஒரு பிடிவாதமும் நீதியல்ல.
என்னிடத்தில் யாரும் அனுசரித்துப் போகாமல் இருந்ததில்லை. இங்கே வீட்டில் இருக்கும் 4 பேர் கூட அனுசரித்துப் போவதில்லை. அனுசரித்துச் செல்ல தெரியுமா, தெரியாதா? கற்பீர்களா, கற்க மாட்டீர்களா? நம்மிடத்தில் மற்றவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறோமோ,அப்படி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீங்கள் கவனிப்பதிலிருந்து தான் கற்றுக் கொள்வீர்கள். நீங்கள் பார்ப்பதைக் கொண்டு தான் கற்றுக் கொள்வீர்கள், என்பது தான் உலக இயல்பு. இதை யாரும் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கத் தேவையில்லை.
இந்த உலகத்தில் உங்களுக்குத் தெரிந்தவை மிகக் குறைவாகவே இருந்தால், அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை. உங்கள் வேலை பற்றி உங்களுக்குக் குறைவாகவே தெரிந்திருக்கலாம். எது எப்படி இருந்தாலும், அனுசரித்து நடக்க உங்களுக்குத் தெரிய வேண்டும். இதை நீங்கள் கற்றுக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் துன்பப்படுவீர்கள். இந்தச் செய்தியை நீங்கள் வாழ்வில் கடைபிடித்து வெற்றியாளர்களாக மாறுங்கள்.
மோதல்களைத் தவிருங்கள் மோதல்களில் ஈடுபடாதீர்கள்
"யாருடனும் மோதலில் ஈடுபடாதீர்கள். அதைத் தவிர்த்து நடங்கள்”. எனது இந்த வாக்கியத்தை ஆராதித்து நீங்கள் நடந்தீர்கள் என்றால், கண்டிப்பாக மோக்ஷத்தை அடைவீர்கள். எனது ஒரே ஒரு வாக்கியத்தை நீங்கள் முற்றுமுழுவதுமாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டால், உங்கள் சாதனை முழுமை பெறும். மோக்ஷம் சித்திக்கும், இது உறுதி.
எனது இந்த ஒரு வார்த்தையை உங்களால் ஒரு தினம் பின்பற்ற முடிந்தால் விசித்திரமான சக்திகள் உங்களுக்குள் உதயமாகும். எத்தனை கடுமையான சச்சரவுகள் இருந்தாலும், உங்களுக்குள்ளே இருக்கும் அளவரியா சக்திகளிடத்தில் அவற்றைத் தீர்க்கும் ஆற்றல் உண்டு.
தவறுதலாக யாருடனாவது மோதல்நிலை ஏற்பட்டு விட்டால், அதைத் தீர்க்க முயலுங்கள். எந்த ஒரு வன்மமும் இல்லாமல்,அந்த சச்சரவிலிருந்து சுமுகமான முறையில் வெளியே வாருங்கள்.
38