________________
இடத்திலிருந்து விலகாது, இது தான் உறுதிப்பாடு விஷயத்திலும் நடக்கிறது. அது நிரந்தரமாக தங்கியிருக்கும். என்னதான் கர்மங்களின் உதயம் உண்டானாலும், மோசமான நிலைகள் ஏற்பட்டாலும், தன்னிருப்பை மாற்றாது, "நான் சுத்தாத்மா” என்ற நிலைப்பாடு மறைந்து போகாது.
அனுபவம், விழிப்புநிலை, உறுதிப்பாடு என்ற மூன்றும் நீடித்து நிலைத்திருக்கும். உறுதிப்பாடு என்றும் இருக்கும். விழிப்பு நிலை என்பதுசில வேளைகளில் தான் இருக்கும். வியாபாரத்திலோ, வேறு தொழிலிலோ ஈடுபடும் போது மீண்டும் விழிப்பு நிலை தவற நேரலாம், ஆனால் வேலை முடிந்த பிறகு, மீண்டும் விழிப்பு நிலை வட்டத்தில் வந்து விடுவீர்கள். அனுபவம் எப்பொழுது ஏற்படும் என்றால் வேலையிலிருந்து, எல்லாவற்றிலிருந்து விடுபட்டு, தனிமையாக இருக்கும் போது அனுபவத்தின் சுவையை நீங்கள் சுவைக்கலாம். அனுபவம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
அனுபவம்,விழிப்பு நிலை,உறுதிப்பாடு, இவற்றில் உறுதிப்பாடு என்பது முக்கியமானது, இது தான் அனைத்திற்கும் ஆதாரமானது. இது ஆதாரமாக அமைந்த பின்னர்,விழிப்பு நிலை உதிக்கும். அதன் பின்னர் "நான் சுத்தாத்மா” என்ற நிரந்தரமான விழிப்பு நிலை நிலைத்திருக்கும். சற்று அமைதியாக விழிப்புஉணர்வுடன் இருக்கும் போது, "அறிந்தவன் - காண்பவன்” என்ற நிலையில் இருப்பது தான் அனுபவம்.
13. நேரடி சத்சங்கத்தின் (ஆத்மாவை பற்றிய சொற்பொழிவு) முக்கியத்துவம் கேள்விகளுக்கான விடையறிய சத்சங்கம் அவசியம்
இந்த அக்ரம் விஞ்ஞான வழியின் வாயிலாக உங்களுக்கும் ஆத்ம அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இது உங்களுக்கு எளிதாக வாய்த்திருக்கிறது. நேரடி சத்சங்கம் உங்களுக்கு பலன் தரும், மேலும் முன்னேற்றம் அடைய உதவுகிறது. சிறப்பாக, இதை ஞானியுடன் தொடர்பில் இருக்கையில் நீங்கள் நன்கு புரிந்து கொள்ள இயலும்.
இந்த ஞானத்தை நுண்ணியமாக ஆழ்ந்து ஆராய்ந்து புரிந்து கொள்ள வேண்டும். ஏனேன்றால், இந்த ஞானம் ஒரே மணி நேரத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எத்தனை பெரிய தன்மை கொண்ட ஞானம்! ஒரு கோடி ஆண்டுகளில் ஏற்படாத ஞானம் உங்களுக்கு ஒரே மணி நேரத்தில் வாய்த்திருக்கிறது. ஆனால் இது அடிப்படை ஞானம், இதை விவரமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் இல்லையா? இதை நன்கு விவரமாகத் தெரிந்து கொள்ள நீங்கள் என் முன்னே அமர்ந்து கொண்டு வினாக்களைத் தொடுத்தால் தானே நான் உங்களுக்குத் தெளிவாக்க முடியும்! இதனால் தான் சத்சங்கம் மிகவும் அவசியம் என்று நான் அடிக்கடி கூறுவது வழக்கம். நீங்கள் இங்கே அமர்ந்து கேள்விகளை
25