________________
வினா : அப்படி என்ன தான் இந்த 5 ஆணைகளில் அடங்கியிருக்கிறது?
தாதாஸ்ரீ: இந்த 5 ஆணைகளும் ஒரு வேலி போன்றது; இவற்றைப் பின்பற்றுவதால், உங்களுக்குள்ளே இருக்கும் பெருஞ்செல்வம் களவு போகாது. நான் உங்களுக்கு எந்த நிலையில் அளித்தேனோ, அதே நிலையில் பாதுகாப்பாக இருக்கும். வேலி தளர்ந்து போயிற்று என்றால் அந்நியர்கள் இதில் ஊடுறுவி பாழ்படுத்தி விடுவார்கள். பிறகு இதை சீர்செய்ய மீண்டும் நான் உங்களை நாடி வரவேண்டி இருக்கும். நீங்கள் இந்த 5 ஆணைகளைப் பின்பற்றும் வரை நீடித்த நிரந்தர சமாதிநிலைக்கான உத்திரவாதம் நான் அளிக்கிறேன்.
ஆணைகளைப் பின்பற்றுவதன் மூலம் விரைவான முன்னேற்றம் வினா : ஞானம் ஏற்பட்ட பிறகு மஹாத்மாக்களின் விரைவான முன்னேற்றம் எதை சார்ந்தது? அவர் தனது முன்னேற்றத்தை எவ்வாறு விரைவுபடுத்த முடியும்?
தாதாஸ்ரீ : 5 ஆணைகளை ஒருவர் பின்பற்றி நடக்கும் வரை அனைத்தும் விரைவாக நடைபெறும். இதற்கு 5 ஆணைகள் தான் காரணம். இந்த 5 ஆணைகளைப் பின்பற்றி நடக்கும் போது அனைத்து மறைப்புக்களும் (அறியாமைகள்) விலகி, சக்திகள் வெளிப்படுகின்றன. வெளிப்படாத சக்திகள் வெளிப்படும். 5 ஆணைகள் பின்பற்றப்படும் போது இறைத்தன்மையான ஐஸ்வர்யம் வெளிப்படுகிறது. அனைத்து விதமான சக்திகளும் வெளிப்படுகிறது. இவையனைத்தும் ஆணைகளைப் பின்பற்றுவதால் நடைபெறும்.
ஆணைகளை நம்பிக்கையோடு, உண்மையாக பின்பற்றுவது தான் மிகவும் முக்கியமான விஷயம். தன் புத்தியைப் பயன்படுத்தாது, இந்த ஆணைகளை மட்டுமே பின்பற்றுவதன் மூலமாக என்னைப் போன்று ஆகிவிடுவார். எவர் ஒருவர் 5 ஆணைகளை ஊட்டமளித்து, மாற்றம் செய்யாமல் பின்பற்றுகிறார்களோ, அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.
மனவுறுதியோடு ஆணைகளைப் பின்பற்ற வேண்டும். தாதாவின் ஆணைகளைப் பின்பற்றுவது என்று முடிவெடுப்பது தான் மிகப் பெரிய விஷயம். நீங்கள் அந்தத் தீர்மானத்தை செய்வது தான் மிகவும் முக்கியம். ஆணைகள் பின்பற்றப்படுகின்றனவா, இல்லையா, என்பதை சுமையாக்கி கொள்ள வேண்டாம். எந்த அளவு ஆணைகள் பின்பற்றப்படுகின்றனவோ, அந்த அளவுக்கு நல்லது. ஆனால் ஆணைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற தீர்மானத்துடன் இருக்க வேண்டும்.
வினா :சரி, ஆணைகளை முழுமையாக கடைப்பிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லையா?
தாதாஸ்ரீ : பரவாயில்லை என்று இல்லை. ஆணைகளைப் பின்பற்றியே தீருவேன் என்று நீங்கள் தீர்மானிக்க வேண்டும். காலை விழித்தெழுந்தவுடனேயே, "நான் 5
22