________________
மனம்-வாக்கு-செயலில், ஒற்றுமை இல்லை என்பதால்
சிறப்பு வழி தான் - அக்ரம்விஞ்ஞானம் படிப்படியாக முன்னேறக்கூடிய மோக்ஷ மார்க்கத்தை உலகம் கண்டுபிடித்து இருக்கிறது, மனதில் இருப்பதையே பேச்சிலும் பேசி, அதுபோல் செயலிலும் செயல்படும். வரை தான் இது பலனளிக்கும். அப்படி இல்லாது போனால் மோக்ஷம் மார்க்கம் மூடப்படும் மனம்-வாக்கு-செயல், ஆகியவற்றின் ஒற்றுமை இல்லாத நிலை ஏற்பட்டிருப்பதால் தான், க்ரமிக் மார்க்கம் பலனளிப்பதாக இல்லை. இதனால் க்ரமிக் மார்க்கத்தின் அடித்தளம் தகர்ந்து விட்டது என்பதால் தான் அக்ரம் மார்க்கம் தோன்றியிருக்கிறது. இங்கே அனைத்தும் அனுமதிக்கப்படுகிறது; நீங்கள் எப்படி இருந்தாலும் சரி, நீங்கள் என்னவாக இருந்தாலும் சரி, இங்கே நீங்கள் என்னை சந்தித்தீர்கள் அல்லவா, ஆதலால் அமருங்கள்! அதாவது நாங்கள் வேறு எந்த ஒரு புறச் சிக்கல்கள் பற்றி கருத்தில் கொள்வதில்லை.
'ஞானியின் கருணையால் தான் சித்தி வினா : நீங்கள் அக்ரம் மார்க்கம் பற்றிக் கூறினீர்கள், இது உங்களைப் போன்ற ஞானிகளுக்கு வேண்டுமானால் ஒத்து வரலாம், சுலபமாக இருக்கலாம், ஆனால் எங்களைப் போன்ற சாமான்யர்களுக்கு, உலகில் உழல்பவர்களுக்கு, வேலை செய்பவர்களுக்கு கடினமாக இருக்கிறதே, இதற்கு என்ன தீர்வு? தாதாஸ்ரீ : ஞானியிடத்தில் பகவான் பிரசன்னமாகி இருக்கிறார், 14 லோகங்களின் நாயகர் வெளிப்பட்டிருப்பார், அப்படிப்பட்ட ஒரு ஞானி உங்களுக்குக் கிடைத்து விட்டால், உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? உங்கள் பலத்தால் சாதிக்க முடியாது. அவரது கருணையால் மட்டுமே இது சித்திக்கும். கருணையால் அனைத்தும் மாறி விடும். ஆகையால் இங்கே நீங்கள் எதை வேண்டிக் கொண்டாலும், அவையனைத்தும் நிறைவேறும். நீங்கள் செய்ய வேண்டியது என்று எதுவும் இல்லை. நீங்கள் ஞானியின் ஆணையின் அடிப்படையில் மட்டும் இருந்தால் போதும். இது தான் அக்ரம் விஞ்ஞானம். அதாவது பிரத்யக்ஷமாக விளங்கும் பகவானிடமிருந்து நீங்கள் வேண்டியதை,பெற்றும் கொள்ள வேண்டும். அவர் ஒவ்வொரு கணமும் உங்களுடனேயே இருக்கிறார்.
வினா : அவரிடம் அனைத்தையும் அர்ப்பணித்து விட்டால், அவரே அனைத்தையும் பார்த்துக் கொள்வாரா? தாதாஸ்ரீ : அவரே அனைத்தும் சாதித்துக் கொடுப்பார். நீங்கள் எதுவுமே செய்யத் தேவையிருக்காது. செய்வது என்று வந்து விட்டாலே, கர்மத்தில் பிணைக்கப்பட்டு விடுவீர்கள். நீங்கள் வெறுமனே லிஃப்டில் உட்கார வேண்டும். லிஃப்டில் 5 ஆணைகளை கடைப்பிடிக்க வேண்டும். லிஃப்டில் அமர்ந்த பின்னர் உள்ளே குதிக்காதீர்கள், கையை வெளியே நீட்டாதீர்கள், இதை மட்டுமே நீங்கள் செய்ய வேண்டும். இது
17